அடடா.. அருண் மாதேஸ்வரனுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?.. கேப்டன் மில்லருக்கே சிக்கல் ஆச்சு.. முடியுமா?
சென்னை: ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து இளையராஜா பயோபிக் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர்களுடன் சேர்ந்து நடத்திய கலந்துரையாடலின் போது உடலுறவு குறித்த படத்தை எடுக்க விரும்புவதாகவும் கண்டிப்பாக அந்த படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ராவான படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை திரையில் காட்டி ரசிகர்களை கட்டிப் போடும் மேஜிக்கை சமீப காலமாக நிகழ்த்தி வருகிறார் அருண் மாதேஸ்வரன்.

அவர் இயக்கிய முதல் படத்தில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா லீடு ரோலில் நடித்திருந்தனர். ஐட்டம் பாடல்கள் மற்றும் தேவையில்லாமல் ஹீரோயின்களை பயன்படுத்துவது என எந்த விஷயத்தையும் அந்த படத்தில் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ஐட்டம் பாடல்கள் வேண்டாம்: சினிமாவில் கதைக்கு தேவையில்லாமல் திணிக்கப்படும் ஐட்டம் பாடல்கள் எடுக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் பேசியுள்ளார். அப்படி படங்களில் தேவையில்லாமல் திணிக்கப்படும் கவர்ச்சி காட்சிகளை ராக்கி படத்திலேயே வைக்க சிலர் கூறினார்கள். ஆனால், நான் உறுதியாக மறுத்து விட்டேன். இருவர் பேசும் காட்சியை பார் செட்டப்பில் படமாக்கி, பின்னாடி ஒரு பொண்ணை ஆட விட வேண்டும் என்றனர். எதுக்கு தேவையில்லாமல் பெண் ஆட வேண்டும் என மறுத்து விட்டேன் என்றார்.
உடலுறவு படத்தை எடுப்பேன்: ஆனால், சினிமாவில் உடலுறவு சம்பந்தப்பட்ட படத்தை எடுக்க ஆசையாக உள்ளது. நடிகர்களை நிர்வாணமாக நடிக்க வைத்து அதற்கான கதையம்சத்துடன் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு படத்தை எடுப்பேன். அந்த படம் அதற்கான ஆடியன்ஸை சென்றடையும் என அருண் மாதேஸ்வரன் பேசியுள்ளார்.
இளையராஜா பயோபிக்: இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி படம் ரிலீஸுக்கு பிறகு ரசிகர்களை அதிகளவில் கவரவில்லை. அதன் இரண்டாம் பாகம் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்ததாக தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ் இந்த படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











