இங்க பத்திக்கிட்டு எரியுது.. இளையராஜா எங்கே சில் பண்றாரு பாருங்க.. குவியும் மோசமான கமெண்ட்டுகள்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய பாடலை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் இளையராஜா பற்றிய விவாதங்கள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தனது கோடை விடுமுறையை வெளிநாட்டில் ஜாலியாக என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தற்போது வெளியிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளார்.

இளையராஜாவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த பிரச்சனை காரணமாக தற்போது குவிந்து வருகிறது.
இளையராஜா vs வைரமுத்து சர்ச்சை: பாடலுக்கு மொழி முக்கியமா? அல்லது இசை முக்கியமா? இரண்டும் கலந்திருந்தால் தானே அது பாடலாகும் என வைரமுத்து பேசியதற்கு கங்கை அமரன் பதிலடி கொடுக்கிறேன் என்கிற பெயரில் வைரமுத்துவை எச்சரித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பலர் கங்கை அமரன் வைரமுத்துவை அப்படி பேசியிருக்கக் கூடாது என கூறியுள்ளனர். தொடர்ந்து வைரமுத்து இசையும் மொழியும் இணைந்திருந்தால் தான் பாடல் உருவாகும் என வலியுறுத்தி வருகிறார்.
ரஜினி படத்துக்கு எதிராக நோட்டீஸ்: இளையராஜா வைரமுத்து சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கூலி படத்தில் இளையராஜாவின் அனுமதி பெறாமல் "வா வா பக்கம் வா" பாடலை பயன்படுத்தியிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் இளையராஜாவை ரஜினிகாந்த் எப்படி எல்லாம் நோஸ் கட் செய்திருக்கிறார் என த்ரோபேக் வீடியோக்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

மொரிஷியஸில் இளையராஜா: இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட இசைஞானி இளையராஜா மொரிஷியஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே ஒரு பீச் குடிலுக்கு அருகே ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டிருக்கும் லாங் ஷாட் போட்டோவை இளையராஜா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மோசமான கமெண்ட்டுகள்: இளையராஜா மொரிஷியஸில் இருந்து எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அங்கே எவனாவது இளையராஜா பாட்டை கேட்டால் காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவார் என்றும் நல்லா வசதியாதானே இருக்கீங்க அப்புறம் எதுக்கு காப்புரிமை காசு என கண்டபடி மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இங்க பத்தவச்சுட்டு அங்க சில் பண்றீங்களா ராஜா சார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











