Karuppu : இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு டீம்.. ரசிகர்கள் கண்டனம் வீண் போகல போல

சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான படம் கருப்பு. சூர்யா, த்ரிஷா, RJ பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து பட்டையைக் கிளப்பி வருகிறது. படத்திற்கு சூர்யா ரசிகர்களில் பெரும்பகுதியினர் கொடுத்த வரவேற்பு, படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த பாராட்டு, வசூல் நிலவரங்கள் உள்ளிட்ட பலவும் மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான படமான அலையோசை படத்தில் இடம்பெற்ற பாடலான போராடடா.. ஒரு வாள் ஏந்தடா என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது மட்டும் இல்லாமல், இந்த பாடலை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டார்கள் என்று இளையராஜா காப்பி ரைட் கேட்டு வழக்கு தொடுத்து விட்டார் என்றும் அந்த காட்சி நீண்டிருக்கும்.

இதற்கு இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. பலரும் இது தொடர்பாக இணையத்தில் பலரும் கண்டப்பதிவுகளை பதிவிட்டனர். சில இளையராஜா ரசிகர்களோ இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழு மீது இசைஞானி இளையராஜா வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டனர்.

Ilaiyaraaja Fans React After Karuppu Team Expresses Regret Over Controversial Scene

நோக்கம்: இந்நிலையில் படக்குழு, " மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

வருத்தம்: 50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிரீம் வாரியர் பிக்சர்ஸ்" என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளது. இவர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வந்தாலும், சில அஜித் ரசிகர்கள் படத்தில், 'இவரு பெரிய அஜித்குமாரு. முதுகுல குத்துறாங்களாம். அப்டின்னு கூட தான் ஒரு நக்கல் டயலாக் இருக்கு. அது கூட ஒறைக்காத அளவு நம்ம ஆர்மி இருக்கு' என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X