'டல்லு ரங்கசாமி' மகனா நீயி...? - ஆச்சர்யத்துடன் கேட்ட இசைஞானி
விஜய்சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கும் படம் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
இயக்குநர் லெனின் பாரதி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு அருகில் இருக்கும் கோம்பை என்ற ஊராம். அழகர்சாமியின் குதிரை படத்தில் லெனின்பாரதி வேலை பார்த்தபோதே இளையராஜா 'எந்த ஊர் என்று கேட்டிருக்கிறார். லெனின்பாரதியும் கோம்பை என்று மட்டும் பதிலளித்தாராம்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்காக சந்தித்தபோது கோம்பையில் யார் மகன்? என்று கேட்டிருக்கிறார் இசைஞானி. 'ரங்கசாமி மகன்' என்றதும் 'டல்லு ரங்கசாமி மகனா நீயி? ஏன் என்கிட்ட சொல்லலை?' என்று கடிந்திருக்கிறார்.
இயக்குநர் ஆன பின்தான் உங்க நண்பர் மகன்னு சொல்லிக்கணும்னு ஆசைப்பட்டேன் என்று இயக்குநர் பதிலளித்ததும் நெகிழ்ந்து விட்டாராம் இசைஞானி.
இது மினிமம் பட்ஜெட் படம் என்பதால் மிக மிகக் குறைவான சம்பளத்துக்கு இசையமைத்திருக்கிறாராம் ராஜா.
ராஜா ராஜாதான்!


Click it and Unblock the Notifications











