twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவே இப்படி மனம் திறந்து பாராட்டி இருக்காரே...யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி ?

    |

    சென்னை : இசைஞானி என உலக இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜாவே ஒருவரை மனம் திறந்து பாராட்டி, விளக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடந்துள்ளது.

    Recommended Video

    இளையராஜாவே இப்படி மனம் திறந்து பாராட்டி இருக்காரே - வீடியோ

    இசைஞானி, இசைமேடை, மேஸ்ரோ என பல வகைகளில், சினிமாவை தாண்டி இசை உலகினரால் போற்றப்படும் ஒரு நபர் இளையராஜா. 1970 கள் துவங்கி தற்போது வரை 1400 க்கும் அதிகமான படங்கள், 7000 பாடல்கள், 20,000 க்கும் அதிகமான இசைக்கச்சேரிகளை நடத்தி, பல சாதனைகள், பாராட்டுக்கள், விருதுகளை ஆகியவற்றை பெற்றவர்.

    சமீபத்தில் இளையராஜாவின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூரில் அவருக்கு சதாபிஷேகம் நடத்தப்பட்டது. குடும்பத்துடன் இளையராஜா கலந்து கொண்ட இந்த பூஜை தொடர்பான போட்டோக்கள் செம டிரெண்டிங் ஆகின. ரஜினி - இளையராஜா சந்தித்து, ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளையராஜாவை சந்தித்தது போன்ற போட்டோக்களும் வெளியாகி டிரெண்டானது. அப்படி இளையராஜா பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    “ராஜா ராஜா சோழன் நான் “… இளம் தலைமுறையினர் பார்வையில் இளையராஜா !“ராஜா ராஜா சோழன் நான் “… இளம் தலைமுறையினர் பார்வையில் இளையராஜா !

    இளையராஜா பாராட்டிய சகோதரிகள்

    இளையராஜா பாராட்டிய சகோதரிகள்

    இந்த நிலையில் இளையராஜாவின் இசையை போற்றும் வகையில் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் ராகா என்ற இசைக்கச்சேரியை நேற்று நடத்தினர். இதில் இளையராஜாவின் இசையில் பயன்படுத்தப்பட்ட ராகங்கள் உள்ளிட்டவைகளை வைத்து இரண்டு மணி நேர கர்நாடக இசை கச்சேரியை நடத்தி முடித்தனர். இதில் இளையராஜாவும் கலந்து கொண்டு, அவர்களை பாராட்டினார்.

    வேற உலகத்திற்கு போய்விட்டேன்

    வேற உலகத்திற்கு போய்விட்டேன்

    இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர்களை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், நான் சினிமாவில் கர்நாடக இசையை ஒட்டி பயன்படுத்திய ராகங்களை வைத்து, அவர்களின் சொந்த கற்பனையையும் இணைத்து இசை கச்சேரி ஒன்றை நடத்தினர். இது என்னை மெய் மறக்க செய்து விட்டது. அந்த இரண்டு மணிநேரமும் இந்த உலகிலேயே நான் இல்லை. வேறு ஒரு உலகிற்கே அழைத்து செல்லும் அளவிற்கு அவ்வளவு சுத்தமாக, கச்சிமாக ஒவ்வொரு இசையையும் அவ்வளவு ஆராய்ச்சி பண்ணி செய்திருந்தனர்.

    நான் இதை செய்வதேயில்லை

    நான் இதை செய்வதேயில்லை

    அவர் செய்த மேஜிக் நம்ப முடியாததாக இருந்தது. அதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்னுடைய வாழ்க்கையில் நான் பண்ணிய விஷயங்களை நான் எப்போதும் திரும்பி பார்ப்பதில்லை. அப்படி திரும்பி பார்த்தால் அது மலைப்பை ஏற்படுத்தி விடும். இவ்வளவு செய்து விட்டோமா என்ற கர்வத்திற்இள் நம்மை அழைத்துச் சென்று, நம்மை அடுத்த கட்டத்திற்கு முன்னேற விடாது. ஆனால் நேற்று இவர்கள் நடத்திய இசை கச்சேரி, நாம் இவ்வளவு எல்லாம் செய்திருக்கிறோமா என என்னை திரும்பிப் பார்க்க வைத்து, மலைக்க வைத்து விட்டது. இப்படி கூட பண்ணிருக்கலாமோ. நாம் ஏன் பண்ணவில்லை என நினைக்க வைத்து விட்டது.

    எப்பேர்பட்ட பாராட்டு

    எப்பேர்பட்ட பாராட்டு

    நான் எதிர்பார்த்தது கொஞ்சம் தான். ஆனால் அவர்கள் கொடுத்தது அதிகமாக மிக அற்புதமாக இசை நிகழ்ச்சியாக இருந்தது. மிக சிரத்தை, வைராக்கியத்துடன் மக்களுக்கு அழகாக அதை கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் பாடியதை நான் அடிக்கடி யூட்யூப்பில் கேட்டுள்ளேன். இவர்கள் உண்மையான இசைக் கலைஞர்கள். இது போன்ற இசை நிகழ்ச்சி எங்கும் நடந்தது இல்லை. சினிமாவிற்காக நான் போட்ட பாடல்களை எடுத்து, அதை வைத்து ஆராய்ச்சி செய்து இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    உலகம் முழுக்க நடத்தனும்

    உலகம் முழுக்க நடத்தனும்

    அவர்களை பாராட்டுவதில் நான் பெருமைப்படுகிறேன். உயர்ந்ததை உயர்ந்தது என்று கண்டுகொண்டு பாராட்டுவது தான் ஒரு இசைக்கலைஞனுக்கு அழகு. எனது இசைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பு தான் இவ்வளவு அழகான ஒரு நிகழ்ச்சியை நடத்த வைத்துள்ளது. உலகம் முழுவதும் இது போன்ற இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும். என்னை பரப்புவதற்காக அல்ல. இசையை பரப்புவதற்காக என மனம் திறந்து பாராட்டி உள்ளார் இளையராஜா.

    ரொம்ப கொடுத்து வச்சவங்க

    இளையராஜாவின் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இதை விட ரஞ்சனி காயத்ரிக்கு என்ன ஆசீர்வாதம் வேண்டும். 80 வயது பூர்த்தி ஆனவர்கள் ஆசீர்வாதம் கிடைப்பது அரிதென்றால் 80 வயது பூர்த்தியான முழுமையான சரஸ்வதி கடாக்ஷம் பெற்ற நம் இசைஞானி வாழ்த்துவது அதை விட அரிது. மிக அழகாக சொல்லி இருக்கிறார். உண்மையான கலைஞராக மற்றொரு கலைஞரை பாராட்டி உள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Yesterday Ilaiyaraaja attented Ranjani Gayatri sisters music concert. They research carnatic music raagas from Ilaiyaraaja's cine music. Ilaiyaraaja impressed by this concert and openly shared his emotions via video. He also shared this video in his twitter page. Fans suprised on this video.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X