வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன்... சோகத்தில் உறைந்த இளையராஜா... வீடியோவில் இரங்கல்

சென்னை: முன்னணி பாடகியான வாணி ஜெயராம் நேற்று மர்மமான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்தபடி மீட்கப்பட்டார்.

நெற்றில் காயங்களுடன் வாணி ஜெயராம் உயிரிழந்து கிடந்தது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புகழ் பெற்ற அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் வணி ஜெயராம் மறைவுக்கு முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 வாணி ஜெயராம் மறைவு

வாணி ஜெயராம் மறைவு

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 1971ம் ஆண்டு இந்தியில் வெளியான 'குட்டி' படத்தில் பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம். தமிழில் தீர்க்க சுமங்கலி படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடலை பாடி ரொம்பவே பிரபலமானார். இந்நிலையில், வாணி ஜெயராம் மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இதனையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வாணி ஜெயராமின் உடல், மீண்டும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, பாடகி சுஜாதா மோகன் உள்ளிட்ட பிரபலங்கல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். அவரது மறைவு இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணி ஜெயராமை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜா இரங்கல்

அதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவும் தனது டிவீட்டரில் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "இந்திய திரையிசையுலகில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி தனக்கென தனியான இடத்தைப் பிடித்துக்கொண்ட வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். எனக்கு மிகவும் அற்புதமான பாடல்களை பாடியுள்ளார், அந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவருடைய குரலும், அவர் பாடுகின்ற அந்த பாணியும் அந்தப் பாடலை மேலும் அழகுபடுத்தியதும் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நேரத்தில் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என பேசியுள்ளார்.

 இசையுலகின் மேஜிக் கூட்டணி

இசையுலகின் மேஜிக் கூட்டணி

இளையராஜா - வாணி ஜெயராம் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. "நானே நானா யாரோ நானா", "மான் கண்டேன்", "கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்", "ஏபிசி நீ வாசி" உட்பட ஏராளமான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளன. இந்நிலையில் வாணி ஜெயராம் மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X