Ilaiyaraaja: திடீரென கண்டிஷன் போடும் இளையராஜா... விடுதலை 2ம் பாகத்துக்கு ஏதும் பிரச்சினை இல்லையே?

சென்னை: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது வயதிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். விடுதலை, மாடர்ன் லவ் சென்னை படங்களில் இளையராஜாவின் இசை ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது விடுதலை 2, ராமராஜன் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட மேலும் சில ப்ராஜெக்ட்களில் இளையராஜா பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், திடீரென இளையராஜா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Ilaiyaraaja: Ilaiyaraaja hike his Salary for Vetrimaarans Viduthalai 2

சம்பளத்தை உயர்த்திய இளையராஜா..? இந்தியா மட்டும் இல்லாமல் சர்வதேச இசையுலகிலும் தவிர்க்க முடியாத ஆளுமை இளையராஜா. அன்னக்கிளி படத்தில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், தற்போது 2கே கிட்ஸ்களையும் தனது இசையால் கிறங்கடித்து வருகிறார். 4 தலைமுறை இயக்குநர்கள், ஹீரோக்களுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவாக தான் இருக்க முடியும்.

1980 முதல் 1990 வரையிலும் கொடிக்கட்டிப் பறந்த இளையராஜா, ஏஆர் ரஹ்மான் வருகைக்குப் பின்னர் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. ஆனாலும், இளையராஜாவின் இசைக்கென பல கோடி ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 80வது வயதான இளையராஜா இப்போதும் பல முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சைக்கோ படத்துக்கு தனியாக இசையமைத்த இளையராஜா, மாமனிதன், கஸ்டடி படங்களில் யுவனுடன் இணைந்து இசையமைத்திருந்தார்.

அதேபோல், இந்தாண்டு மார்ச் மாதம் வெளியான விடுதலை படத்துக்கும் இளையராஜா தான் இசை. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த விடுதலை படத்தில், பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான மாடர்ன் லவ் சென்னை சீரிஸ்ஸிலும் இளையராஜாவின் மேஜிக் செம்மையாக ஒர்க் அவுட் ஆனது.

தற்போது விடுதலை 2ம் பாகம், ராமராஜானின் புதிய படம் என பிஸியாகவே இருக்கிறார். மேலும் சில இயக்குநர்களும் இளையராஜாவின் இசைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுவரை ஒரு படத்துக்காக 75 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி வருகின்றனாராம். அவரது சிஷ்யராக இருந்து ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுவிட்ட ஏஆர் ரஹ்மான், ஒரு படத்துக்காக 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் விடுதலை 2ம் பாகத்துக்கு இசையமைத்து வரும் இளையராஜா, 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விடுதலை 2ம் பாகத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்கி வருகிறார் வெற்றிமாறன். இதனால், பட்ஜெட்டில் சில பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இளையராஜாவும் சம்பளம் அதிகம் கேட்பது தயாரிப்புத் தரப்பினரை டென்ஷனாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் விடுதலை 2ம் பாகத்துக்கு எந்த பிரச்சினையும் வராது என படக்குழுவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X