Ilaiyaraaja: "எனக்கு இசை வாரிசுன்னு யாரும் இல்ல..” யுவன் விஷயத்தில் அமீருக்கு டோஸ் விட்ட இளையராஜா!
சென்னை: அமீரின் பருத்திவீரன் பட விவகாரம் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்தப் படத்தின் வெற்றியில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கும் பெரிய பங்கு உள்ளது.
இந்நிலையில், பருத்திவீரன் படத்தில் இளையராஜா பாடியது குறித்து அமீர் பேசியிருந்தார்.
அதேபோல், யுவனுக்காக சப்போர்ட் செய்து இளையராஜாவிடம் திட்டு வாங்கியது பற்றியும் அமீர் மனம் திறந்துள்ளார்.

இளையராஜாவிடம் திட்டு வாங்கிய அமீர்: மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யா, த்ரிஷா, நந்தா, லைலா நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து ராம் படத்தை இயக்கினார் அமீர். பின்னர் கார்த்தி கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை இயக்கியிருந்தார் இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
முக்கியமாக பருத்திவீரன் திரைப்படம் அசுரத்தனமான வெற்றியை பதிவு செய்தது. அதேநேரம் இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும், அமீர், ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் அமீரின் படங்களுக்கு எப்போதுமே யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். அமீர் - யுவன் கூட்டணிக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது.
முக்கியமாக பருத்திவீரன் படத்தின் வெற்றியில் யுவனுக்கும் அதிக கிரடிட் உள்ளது. பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் மிரட்டியிருந்தார். பருத்திவீரன் படத்தில் 'அறியாத வயசு' என்ற பாடலை இளையராஜா பாடியிருந்தார். ராஜாவின் குரலில் மெலடியாக வெளியான இப்பாடல் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.
'அறியாத வயசு' பாடல் ரெக்கார்டிங்கின் போது யுவன் ஸ்டுடியோவுக்கு வரவே இல்லையாம். அப்பாவிடம் சொல்லிவிட்டேன், அவர் வந்தால் நீங்களே பார்த்து ரெக்கார்டிங் செய்துகொள்ளுங்கள் என யுவன் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதனால் இளையராஜா ஐயா ஸ்டுடியோ வரும் போது, யுவன் இல்லாததால் எனக்கு நடுக்கம் வந்துவிட்டது என அமீர் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவிடம் சென்று யுவன் தான் உங்கள் இசை வாரிசு என கூறியுள்ளார் அமீர். இதனைக் கேட்ட இளையராஜா, தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு, அமீருக்கு டோஸ் விட்டுள்ளார். அதாவது "எனக்கு இசை வாரிசுன்னு யாரும் கிடையாது. நான் அதெல்லாம் ஏத்துக்க மாட்டேன்" என அமீரை கலாய்த்துள்ளார்.
ஆனால், அமீரோ அதெல்லாம் கிடையாது, யுவன் உங்கள் வாரிசு தான். அப்படித்தான் நாங்கள் அவரை கொண்டாடுகிறோம் என இளையராஜாவிடமே தைரியமாக கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தை யுவன் 25 நிகழ்ச்சியில் அமீர் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











