மகள் பவதாரிணிக்காக இளையராஜா எடுத்த முடிவு.. சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க

சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த வருடம் உடல்நல குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ராஜாவின் குடும்பத்தை மட்டுமின்றி அத்தனை பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் சூழலில் தற்போது அவரது தந்தை இளையராஜா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. தந்தை வழியில் இசை மீது ஆர்வம் கொண்ட அவர் சிறு வயதிலேயே பாடகியாக அறிமுகமாகிவிட்டார். ராஜாவின் இசை மட்டுமின்றி பலரது இசையில் பாடியிருக்கும் அவரது குரல் தனித்துவமானது. அழகி படத்தில் இடம்பெற்ற ஒளியிலே தெரிவது தேவதையா போன்ற பல அட்டகாசமான பாடல்களை பாடியிருக்கும் அவர் சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.

உயிரிழந்த பவதாரிணி: நீண்ட வருடங்கள் வாழ்ந்து தந்தை, சகோதரர்கள் போன்று இசை துறையில் சாதிப்பார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் கடந்த வருடம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றிட வேண்டுமென இலங்கைக்கு அழைத்து சென்று அளிக்கப்பட்ட சிகிச்சையும் பலனளிக்கவில்லை. பவதாவின் உயிரிழப்பு ஒட்டுமொத்த குடும்பம் மட்டுமின்றி திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது குரலை ஏஐ மூலம் கோட் படத்தில் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja Launches Bhavatha Girls Orchestra in Memory of His Late Daughter Bhavatharini

இளையராஜாவுக்கு பெரிய சோகம்: பவதாரிணி மீது இளையராஜாவுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. பல நேரம் அவரது கோபம் எல்லாம் பவதாரிணியை பார்த்தால் பஞ்சாக பறந்துவிடும் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட மகளின் இழப்பு வெகுவாகவே ராஜாவை பாதித்தது. இருப்பினும் இறப்பு என்பதை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து அவர் மெல்ல மெல்ல சோகத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

ராஜாவின் அறிவிப்பு: இந்நிலையில் இளையராஜா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது 'பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா' என்கிற பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்றை தொடங்கவிருப்பதாக அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திறமையுள்ள பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இதனை தொடங்கியிருக்கிறார் இசைஞானி.

மிஸ் பண்ணாதீங்க: இதுதொடர்பான அறிவிப்பில், "நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பாடகர் அல்லது இசை கலைஞராக இருந்தால் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இது உங்களை பிரகாசிக்க வைக்கும் மேடை. அதனால் உங்கள் திறமைகள் மற்றும் உங்கள் சுயவிவரம், தொடர்பு கொள்வதற்கான விவரங்கலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். விரைவில் உங்களை தொடர்புகொள்வேன்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X