யுவனை கலாய்த்த இளையராஜா...வைரலாகும் வீடியோ!
சென்னை : இசை ஜாம்பாவான் இளையராஜா தனது 78வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவின் பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் யுவன்சங்கர் ராஜா செமயாக கலாய்த்து இருக்கிறார் இளைராஜா.

இன்று பிறந்தநாள்
1943ம் ஆண்டு ஜூன் 3 ந் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன். ஜூன் 3ந் தேதி பிறந்த இவர் கலைஞர் மீது கொண்ட அன்பால் ஆண்டுதோறும் ஜூன் 2ந் தேதி தனது பிறந்த கொண்டாடி வருகிறார்.
Recommended Video

இசை சகாப்தம்
இளையராஜா ஒரு இசை சகாப்தம். தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார். அவருடைய இசைக் குறிப்புகளை பகுப்பாய்வு செய்து பிரிக்கும் ஏராளமான கட்டுரைகள் வெளி வந்துள்ளன. எனினும் இளையராஜா ஒரு பின்நவீனத்துவவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

வாழ்த்து
இளையராஜா இன்று தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவரது நெருங்கிய நண்பரான பாரதிராஜா, ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Happy birthday Maestro Ilayaraja. The Legend#HBDilayaraja#HBDRajasir #HappyBirthdayIlaiyaraaja #ilayaraja #MaestroIlayaraja #இளையராஜா78 pic.twitter.com/cbWgd89xbz
— Yusuf ||| யூசுஃப் (Thadakathatthan) June 2, 2021
செம கலாய்
இளையராஜாவின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், இணையத்தில் இளையராஜாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கரக்காட்டக்காரன் திரைப்படத்தில் வரும், மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா எப்படி இசையமைத்து இருப்பார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார். இசையராஜா, யுவனை ஓட்டி இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











