twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவனை கலாய்த்த இளையராஜா...வைரலாகும் வீடியோ!

    |

    சென்னை : இசை ஜாம்பாவான் இளையராஜா தனது 78வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    இளையராஜாவின் பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    கீபோர்டில் ஹேப்பி பர்த்டே மியூசிக்.. அப்பாவுக்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன யுவன்!கீபோர்டில் ஹேப்பி பர்த்டே மியூசிக்.. அப்பாவுக்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன யுவன்!

    அந்த வீடியோவில் யுவன்சங்கர் ராஜா செமயாக கலாய்த்து இருக்கிறார் இளைராஜா.

    இன்று பிறந்தநாள்

    இன்று பிறந்தநாள்

    1943ம் ஆண்டு ஜூன் 3 ந் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன். ஜூன் 3ந் தேதி பிறந்த இவர் கலைஞர் மீது கொண்ட அன்பால் ஆண்டுதோறும் ஜூன் 2ந் தேதி தனது பிறந்த கொண்டாடி வருகிறார்.

    Recommended Video

    இளையராஜா கண்ணதாசனுக்கு செய்த விஷயம் | REWIND RAJA EP-14 |Mrs.JAYANTHI KANNAPPAN|FILMIBEAT TAMIL
    இசை சகாப்தம்

    இசை சகாப்தம்

    இளையராஜா ஒரு இசை சகாப்தம். தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார். அவருடைய இசைக் குறிப்புகளை பகுப்பாய்வு செய்து பிரிக்கும் ஏராளமான கட்டுரைகள் வெளி வந்துள்ளன. எனினும் இளையராஜா ஒரு பின்நவீனத்துவவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

    வாழ்த்து

    வாழ்த்து

    இளையராஜா இன்று தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவரது நெருங்கிய நண்பரான பாரதிராஜா, ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    செம கலாய்

    இளையராஜாவின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், இணையத்தில் இளையராஜாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கரக்காட்டக்காரன் திரைப்படத்தில் வரும், மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா எப்படி இசையமைத்து இருப்பார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார். இசையராஜா, யுவனை ஓட்டி இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Ilaiyaraaja music video viral on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X