Ilaiyaraaja: "இளையராஜா கூட சண்டை... இசைக்காக அவரிடம் போக முடியாது..” உண்மையை போட்டுடைத்த மிஷ்கின்!

சென்னை: இந்த வாரம் முழுவதும் இயக்குநர் மிஷ்கின் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய்க்காக இதயத்தை அறுத்துக் கொடுப்பேன் எனக் கூறி ரசிகர்களுக்கே டஃப் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து டெவில் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா பற்றி பேசியது வைரலாகியுள்ளது.

இளையராஜாவுடன் சண்டை எனவும், இனி இசைக்காக அவரிடம் போய் நிற்க முடியாது எனவும் அதிரடிக் காட்டியுள்ளார்.

 Ilaiyaraaja: Mysskin opens up about his fight with Ilaiyaraaja

இளையராஜாவுடன் சண்டை
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் அறிமுகமான மிஷ்கின், இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்கள் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சில வருடங்களாக அவர் நடிப்பிலும் பிஸியாகிவிட்டார்.

கடந்த மாதம் வெளியான விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் சண்டைக் காட்சியில் நடித்திருந்த மிஷ்கின், லியோ சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டு ரத்தம் தெறிக்க தெறிக்க பேசியிருந்தார். மைக்கேல் ஜாக்சன், ப்ரூஸ்லீ தான் நான் படித்த லெஜண்ட்கள், ஆனால் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய் தான் என்றார்.

அதேபோல், விஜய்க்காக என் இதயத்தையும் அறுத்துக் கொடுப்பேன் என, அவரது படங்களில் வரும் வில்லன்களைப் போலவே எக்ஸ்ட்ரா லார்ஜ் வைப் கொடுத்தார். லியோ சக்சஸ் மீட்டில் மிஷ்கின் பேசிய ஃபீவர் இன்னும் குறையாத நிலையில், டெவில் இசை வெளியீட்டு விழாவிலும் பங்கம் செய்துள்ளார். இந்தமுறை இளையராஜா பற்றி மிஷ்கின் பேசியது வைரலாகி வருகிறது.

அதாவது, "இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன், அதனால் இனிமேல் இசையமைக்கச் சொல்லி அவரிடம் போய் நிற்க முடியாது" என அதிரடியாகக் கூறியுள்ளார். இளையராஜாவுடன் மிக நெருக்கமான இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் மிஷ்கின் இவ்வாறு பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே இளையராஜாவுடனான சண்டை குறித்து மிஷ்கின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 Ilaiyaraaja: Mysskin opens up about his fight with Ilaiyaraaja

இளையராஜா இனிமேல் தன்னை அப்பான்னு சொல்லக் கூடாது என ஆர்டர் போட்டார். அதைக் கேட்டதும் அவர் ஸ்டூடியோ வாசலிலேயே நின்று தேம்பித் தேம்பி அழுதேன். அதன்பிறகு அவரை ஐய்யா என்றுதான் கூப்பிட்டேன். சைக்கோ படத்தின் 'உன்ன நெனச்சு' பாடல் கம்போஸ் செய்யும் போது தான் எங்களுக்குள் பிரச்சினை எழுந்ததாகவும், அவர் அனுமதி இல்லாமலேயே சித் ஸ்ரீராமை அழைத்து அந்தப் பாடலை பாட வைத்தேன் எனவும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X