Ilaiyaraaja: இது சரக்கு இது முறுக்கு... இளையராஜாவுக்கே தண்ணி காட்டிய பிரேம்ஜி... தில்லான ஆளுதான்யா!

சென்னை: இசைஞானி இளையராஜா நேற்று (ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையடுத்து இளையராஜாவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதேபோல், கங்கை அமரனும் அவரது மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

அப்போது பிரேம்ஜி அணிந்திருந்த டி-ஷர்ட் நெட்டிசன்கள் பார்வையில் சிக்கி வைரலாகி வருகிறது.

இது சரக்கு இது முறுக்கு:இசையமைப்பாளர் இளையராஜா நேற்று (ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன் அவரது மகன்களுடன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

 Ilaiyaraaja: Premji Amaran wishing Ilaiyaraaja on his birthday is trending

கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் மூவருமே இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர். இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பவதாரினி என அவர்களின் மொத்த குடும்பமும் திரையுலகின் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இளையராஜாவும் கங்கை அமரனும் 1980, 90 களில் கலக்கியதைப் போல, வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி இப்போது மாஸ் காட்டி வருகின்றனர்.

இவர்களில் ரொம்பவே சேட்டைக்காரர் என்ற பெருமை பிரேம்ஜிக்கு உண்டு. இன்றுவரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் பிரேம்ஜி, திடீரென பார்ட்டியில் செம்ம லூட்டி அடிப்பார், அதேபோல், திடீரென ஆன்மீகத்திலும் அதிக ஆர்வம் காட்டுவார். இந்நிலையில், நேற்று இளையராஜாவுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ செம்ம வைரலாகி வருகிறது.

இளையராஜா எப்போதும் போல தெய்வீக நிலையில் பரவசத்துடன் காட்சித் தருகிறார். அவர் அருகே ஜீன்ஸ், கறுப்பு டீஷர்ட் அணிந்து நிற்கிறார் பிரேம்ஜி அமரன். முக்கியமாக அவர் போட்டிருக்கும் டீ ஷர்ட்டில் "இது சரக்கு... இது முறுக்கு" என கேப்ஷன் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இளையராஜா - பிரேம்ஜி இருவரும் உள்ள போட்டோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வரும் அவர்கள், "எங்க தல தில்ல பார்த்தியா? அதுவும் பெரியப்பா (இளையராஜா) கூட இருக்கும் போதே... "இது சரக்கு இது முறுக்கு" என பங்கம் செய்கிறாரே என கேப்ஷன் கொடுத்துள்ளனர். அதேபோல், "தல நீ வேற லெவல்யா... எதற்கும் அஞ்சாத சிங்கம்" என பிரேம்ஜியை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X