Ilaiyaraaja: மனோபாலா விசயத்துல இளையராஜா இப்படி பொய் சொல்லிருக்கக் கூடாது... விளாசிய பிரபலம்
சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், ஆர்யா, இயக்குநர்கள் லோகேஷ், ஷங்கர் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், ரஜினி, கமல், இளையராஜா ஆகியோரும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதில் இளையராஜா மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இளையராஜா சொன்னது எல்லாமே பொய்: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞரான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த மனோபாலா, திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மனோபாலா மறைவை அறிந்த திரையுலகினர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜாவும் மனோ பாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், மனோபாலா குறித்து இளையராஜா பேசியது சர்ச்சையானது. அதில், தன்னிடம் மிகுந்த மரியாதையாக இருத மனோபாலா, தன்னை சந்திக்க வேண்டும் என்பதற்காக கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருப்பார். நான் காரில் புறப்படும் நேரம் தெரிந்துகொண்டு கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர் என கூறியிருந்தார்.

இளையராஜாவின் இந்த வீடியோவை அவரது ரசிகர்களே விமர்சித்திருந்தனர். மனோபாலாவின் இரங்கல் செய்தியில் கூடவா இவ்வளவு சுய புகழ் தேவையா என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் கே ராஜனும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் மனோபாலா மறைவு குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது தான் அவர் இளையராஜாவையும் விமர்சித்தார்.
அதில், கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருந்து இளையராஜாவை சந்திக்கும் அளவிற்கு மனோபாலா மோசமாக இருந்துவிடவில்லை. இந்த விசயத்தில் மனோபாலா குறித்து இளையராஜா பேசியது சுத்த பொய். மனோபாலா மட்டுமல்ல எந்த இயக்குநரும் கோடம்பாக்கம் பாலத்தில் அவருக்காக காத்திருந்தது இல்லை என கே.ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாத் லேப்பில் வாடகைக்கு இருந்த இடத்தை சொந்த இடம் என வழக்கு போட்டவர் தான் இளையராஜா.

அதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லாம் செலவு செய்து ட்யூன் போட சொன்ன பாடல்களுக்கு காப்பி ரைட் பிரச்சினையை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்தார். இப்போது ஒவ்வொருவரையும் அவமானப்படுத்தி வருகிறார் இளையராஜா. அவர் புத்தி ஏன் இப்படி மாறிவிட்டது என தெரியவில்லை. எம்.பி. பதவிக்காக பிரதமரை பாராட்டினார். அவர் அப்படி பேச பிரதமரிடம் சில குணங்களும் நற்காரியங்களும் இருக்கலாம்.
ஆனால், அதைவிடுத்து அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியதுபோல வேற எந்த துரோகம் இல்லை. நான் உண்மையிலேயே அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என மிக காட்டமாக பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜாவுக்கு தொடர்ந்து விமர்சனங்கள் வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











