இளையராஜாவின் இசையில் “ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்“… சர்வதேச அளவில் உருவாகும் தரமான படம் !
சென்னை : இளையராஜா இசையமைக்கும் 1422வது படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
காதலை மையமாக வைத்து உருவாக உள்ள, இப்படத்தில், கிரிஷ் கதாநாயகனாகவும், மாட்டில்டா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இளையராஜா
தமிழக இசையை உலகளவில் பிரபலமடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை இசைஞானி என்று கொண்டாடி வருகிறது. இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார்.

9 மொழிகளில்
1976ல் அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என கிட்டத்தட்ட 9 மொழிகளில் இவர் இசையமைத்துள்ளார்.

ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்
இந்நிலையில், இசைஞானி இசையமைக்கும் 1422 திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பு காதலர் தினமாக நேற்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகி வரும் ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப் என்ற படத்திற்கு இளையராஜா இசைமையக்கிறார்.

காதல் கதை
வாசு நாங்க பக்கா கமர்ஷியல் என்ற கன்னடப் படத்தை இயக்கிய அஜித் வாசன் உஜ்ஜினா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும், 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. காதலை மையமாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்தில் கிரிஷ் கதாநாயகனாகவும், மாட்டில்டா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











