ராக தேவன் பிறந்த நாளில்.. சிவகார்த்திகேயன் வீட்டிலும் கேக் கட்டிங்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். மினிமம் கேரண்டி வசூல் என்ற அளவுக்கு அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. ஜூன் 2ஆம் தேதியான இன்று தமிழ் திரையுலகில் பலரும் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நாளில் சிவகார்த்திகேயன் வீட்டிலும் பிறந்தநாள் கேக் கட்டிங் செலிபிரேஷன் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் ஆராதனா, அதன் பின்னர் மகன் குகன் தாஸ், மூன்றாவதாக இளைய மகன் பவன் என இந்த தம்பதியர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Ilaiyaraaja s birthday Sivakarthikeyan s family has another special occasion his youngest son Pavan turned two

இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள்: மகள் ஆராதனா கடந்த 2013ஆம் ஆண்டு பிறந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த படமான கனா படத்தில் வாயாடி பெத்த புள்ளை என்ற பாடலையும் அவர் பாடி, தமிழ்நாடு அரசு விருதையும் பெற்றார். இரண்டாவது மகன் குகன் தாஸ் கடந்த 2021ஆம் ஆண்டும், மூன்றாவது மகன் பவன் கடந்த 2024ஆம் ஆண்டும் பிறந்தனர். இதில் மூன்றாவது மகன் பவனுக்கு இன்று இரண்டாம் ஆண்டு பிறந்த நாள். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது மகன் பவன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, " குட்டி குறும்பின் வயது 2 !!
Too cute to be two, two fast, two curious Happy Birthday my dear" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Ilaiyaraaja s birthday Sivakarthikeyan s family has another special occasion his youngest son Pavan turned two

நம்பிக்கை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அயலான் படத்திற்கு பின்னர் வெளியான அமரன் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதேபோல், அதன் பின்னர் வெளியான மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக, மதராஸி படம் விமர்சன ரீதியாக பெரும் அதிருப்தியை தான் ஈட்டியது. இவருக்கு சேயோன் படம் கம் பேக் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X