இளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பை போல்போட்டிருக்காங்க.. வக்கீல் அதிர்ச்சித் தகவல்
சென்னை: இளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பைப் போல் போட்டு வைத்திருப்பதாக இளையராஜாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
Recommended Video

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வந்தார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்த இடத்தை பயன்படுத்தி வந்தார்.

பிரசாத் ஸ்டூடியோ
அந்த பகுதியை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜா போலீசில் புகார் செய்தார். இது பரபரப்பானது.

வருகை ரத்து
பின்னர் சமாதானம் ஆனது. அதன்படி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று காலை வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இது தொடர்பாக அவருடைய செய்தி தொடர்பாளர், இளையராஜா வருவது ரத்து செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அறையை காணவில்லை
இந்நிலையில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, பிரசாத் ஸ்டூடியோவில், இளையராஜா பயன்படுத்திய அறையை காணவில்லை. அதில் இருந்த பொருட்கள் அங்கு இல்லை. அவர் வாங்கிய பத்மபூஷன் விருது கூட அந்த அறையில்தான் இருந்தது.

மியூசிக்கல் நோட்ஸ்
அவருடைய மியூசிக்கல் நோட்ஸ், முக்கியமான புகைப்படங்கள் உட்பட பல ஆவணங்கள் அங்கு இருந்தது. அவற்றை அங்கிருந்து வேறொரு இடத்தில் குப்பை போல் போட்டு வைத்துள்ளனர். இதுபற்றிய தகவலை இளையராஜாவிடம் சொன்னோம். அந்த அறையே இல்லை என்றால் நான் என்ன செய்வது?

மன வருத்தம்
பிறகு ஏன் நான் அங்கு வரவேண்டும்? என்று இளையராஜா வரவில்லை. அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை இளையராஜாவுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











