முத்துராமலிங்க தேவர் பயோபிக்.. இசை அமைக்கிறார் இளையராஜா.. படக்குழு தகவல்!

By

சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கைக் கதைக்கு இளையராஜா இசை அமைக்க இருக்கிறார்.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாக எடுப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது.

அது போன்ற பயோபிக் கதைகள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவதால் அதை எடுக்க சினிமா துறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Ilaiyaraaja to be compose Pasumpon Muthuramalinga Thevar biopic

தற்போதும் பல விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் பற்றிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஜெ.எம்.பஷீர், தேவராக நடிக்கிறார். இவர், குற்றாலம் மற்றும் அராத்து படங்களில் நடித்தவர். படத்தை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். 'ஊமை விழிகள்' அரவிந்தராஜ் இயக்குகிறார்.

Ilaiyaraaja to be compose Pasumpon Muthuramalinga Thevar biopic

தேவரின் சிஷ்யரான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய 'முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் அதில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Ilaiyaraaja to be compose Pasumpon Muthuramalinga Thevar biopic

கொரோனா பிரச்னைகள் முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பஷிர், ஊரடங்கு ஆரம்பமான மார்ச் மாதத்தில் இருந்து கடந்த 4 மாதத்திற்கும் மேலாக, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தினமும் உணவு கொடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X