Ilaiyaraaja: எப்பவும் நான் ராஜா.. லண்டன் டு பாரிஸ்.. கோட் சூட்டில் செம மாஸாக ரயில் பயணம்.. வீடியோ!

லண்டன்: இசையுலகின் ஞானியாக கொண்டாடப்படும் இளையராஜா கோட் சூட் அணிந்துக் கொண்டு செம கெத்தாக லண்டனில் இருந்து பாரிஸ் நகரத்துக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட வீடியோவை தற்போது தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து ஆயிரம் படத்துக்கு மேல் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது இசை ஆற்றலால் அண்ணாந்து பார்க்க வைத்த மேஸ்ட்ரோ இளையராஜா சமீப காலமாக இசை கச்சேரிகளை நடத்தி சர்வதேச ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார்.

ilaiyaraaja music viduthalai 2

இளையராஜாவின் இசைக்கச்சேரியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.

மகளின் மரணம்: இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி உயிரிழந்தது இளையராஜாவை ரொம்பவே மனதளவில் உடைத்து விட்டது. இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீளா சோகத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர் பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை இளையராஜா தவிர்த்து வந்த நிலையில், தற்போது இசைக் கச்சேரிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

லண்டன் டு பாரிஸ் ரயிலில்: சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற Truly Live in Concept எனும் இசைக்கச்சேரி லண்டன் மற்றும் பாரிஸ் நகரிலும் சமீபத்தில் நடைபெற்றது. அதற்காக இங்கிலாந்தின் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் வரை ரயில் பயணம் மேற்கொண்ட வீடியோவை தற்போது இளையராஜா வெளியிட்டுள்ளார். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" பாடலுடன் அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இளையராஜா பயோபிக்: இளையராஜா இசையில் சமீபத்தில் வெளியான ஜமா படம் பாராட்டுக்களை பெற்ற நிலையில், அடுத்ததாக விடுதலை 2 படம் அவரது இசையில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக காத்திருக்கிறது. மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இளையராஜா பயோபிக் படமும் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்களை கமல்ஹாசன் கதையாக எழுதி கொடுக்க கேப்டன் மில்லர் இயக்குநர் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X