நீ பொட்டு வச்ச தங்கரதம்.. இளையராஜா பாட்டால் அடுத்த ஹிட் கன்ஃபார்ம்.. லப்பர் பந்துக்கு லாட்டரி!

சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குணா படத்தின் "கண்மணி அன்போடு காதலன்" பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. மலையாளத்தில் படம் எந்தளவுக்கு ஓடியதோ அதே போல தமிழ்நாட்டிலும் வேறலெவலில் வசூல் வேட்டையை அந்த படம் நிகழ்த்த காரணமே இளையராஜாவின் பாடலை கிளைமேக்ஸில் கச்சிதமாக வைத்தது தான்.

ஆனால், அந்த பாடலுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உரிமைத் தொகையை செலுத்தி விட்டுத் தான் அந்த பாடலை படத்தில் பயன்படுத்தியதாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தது மேலும், சர்ச்சையை கிளப்பியது.

lubber pandhu vijayakanth ilaiyaraaja

இந்நிலையில், இளையராஜாவின் பாடல் வரிகளால் அடுத்து ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக டிரெண்டாகி வருகிறது. கடந்த வாரம் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் ரசிகராக தினேஷ் நடித்துள்ள நிலையில், அவருக்கான பில்டப் பாடலாகவே இளையராஜா இசையமைத்த "நீ பொட்டு வச்ச தங்கரதம்" பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பனைமரத்தோட ஹைட்டா பறக்கும் சிக்ஸர்: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ம் தேதி வெளியான லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியான படங்களிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த படத்தில் பனை மரத்தோட ஹைட்டாக சிக்ஸர் அடிக்கக் கூடிய ஆள் கெத்து என தினேஷை காட்டும் காட்சியில் விஜயகாந்தின் பாடல் ஒலிக்க அரங்கமே அதிர்கிறது.

கோட் படத்தை விட: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் உருவாக்கி காண்பித்த நிலையிலும், அது வெறும் விஜய் அணிந்து வந்த மாஸ்க் என்றதும் அந்த சீன் பெரிதாக ஒட்டவில்லை. ஆனால், லப்பர் பந்து படத்தில் இடம்பெறும் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் நிஜமாகவே கேப்டனுக்கான மிகப்பெரிய ட்ரிப்யூட்டாக மாறியிருக்கிறது.

பொட்டு வச்ச தங்க ரதம்: கேப்டன் விஜயகாந்த் நடித்த பொன்மன செல்வன் படத்தில் இளையராஜா இசையில் கங்கை அமரன் வரிகளில் மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் சித்ரா உள்ளிட்டோர் இணைந்து பாடிய இந்த பாடல் அப்போதே மிகப்பெரிய வெற்றிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாடும் போது இந்த பாடலை ஒலிக்கவிட்டு கேப்டன் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற "ஆட்டமா தேரோட்டாமா" பாடலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

lubber pandhu vijayakanth ilaiyaraaja

உரிமைத் தொகை பிரச்சனை வெடிக்குமா?: இளையராஜாவிடம் உரிய அனுமதியை பெற்று இந்த படத்தில் ஷான் ரோல்டன் பாடல்களை வைத்துள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ், கூலி படங்களுக்கு ஏற்பட்டதை போல உரிமைத் தொகை பிரச்சனை இந்த படத்துக்கும் வெடிக்குமா? என ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை இளையராஜா தரப்பிடம் இருந்து இந்த படத்துக்கும் இந்த படத்தில் வைக்கப்பட்டுள்ள பாடல்களுக்கும் எதிர்ப்புகள் வரவில்லை. விரைவில் வருமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். சோஷியல் மீடியா முழுக்கவே தற்போது லப்பர் பந்து படத்தின் இந்த பாடல் காட்சி தான் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X