பிரசாத்தை தூக்கி எறிந்தார் இளையராஜா.. புதிய ஸ்டூடியோவில் முதல் முறையாக.. இசை ஆலாபனை!
சென்னை: இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவில் முதல் முறையாக இன்று இசையமைக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் இசைப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

35 ஆண்டுகளுக்கும் மேலாக..
7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விருதுகள் உட்பட ஏராளமனா விருதுகளை குவித்துள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா.

நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தியானம் செய்யும் முடிவு
இறுதியாக ஒரு நாள் பிரசாத் ஸ்டுடியோவில் அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டார் இளையராஜா. அதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் தான் வைத்திருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு தியானம் செய்யும் முடிவை கைவிட்டார் இளையராஜா.

புதிய ஸ்டுடியோ
இந்நிலையில் தியாகராயநகரில் உள்ள எம்எம் தியேட்டரை தனது ரெக்கார்டிங்க ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார் இளையராஜா. இந்த ஸ்டுடியோவில் இன்று முதல் முறையாக இளையராஜா இசையமைக்கிறார்.

சூரி ஹீரோவாக..
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடலை இளையராஜா இன்று ரெக்கார்டிங் செய்கிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ நடிக்கிறார்.

வெற்றிமாறன் படத்தில்
சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் தனது புதிய ஸ்டுடியோவில் முதல் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா.


Click it and Unblock the Notifications











