Ilaiyaraaja: ’சங்கத்தில் பாடாத கவிதை’ பாடல் டியூனை 6 பாட்டுக்கு பயன்படுத்திய இசைஞானி.. எல்லாமே ஹிட்!
சென்னை: இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமாகத் திகழ்கின்றார். இவர் இசையில் ஜாம்பவான் என்பது இவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். தனக்கு இசையில் அனைத்துமே தெரியும், தான் ஒரு இசை ஜாம்பவான் என்பதற்காக ஒரு பாடலின் உருவாக்கத்தில் ரசிகர்களின் தன்மை குறித்தும் அவர்களின் திறன் ஆர்வம் குறித்து எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இசை அமைப்பவர் கிடையாது. இப்படியான குணம் கொண்ட இளையராஜா ஒரே டியூனை பயன்படுத்தி 6 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
முன்பு கூறியது போல் இளையராஜா, ஒரு பாடலை இசைக்கும்போது, ' யாரோ ஒருவர் டீக்கடையில் கிழிந்த ஸ்பீக்கர் மூலம் பாடல் கேட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களுக்கு நான் உருவாக்கும் பாடல் கேட்கவேண்டும்' என யோசித்து இசை அமைக்கும் பக்குவம் கொண்டவர். இவரது இசையில் இதுவரை 1500 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பாடல்களைக் கொடுத்துள்ளார். பல படங்களை தனது இசையின் மூலம் பெரிய அளவில் வெற்றிப் படமாக மாற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் இசையை எழுதக் கூடிய கம்போஸர் இவர் ஒருவர் மட்டும்தான்.

சங்கத்தில் பாடாத கவிதை: இவர் ஒரு டியூனை பயன்படுத்தி ஆறு பாடல்களை உருவாக்கியுள்ளார் என்று கூறினால் நம்ப முடிகின்றதா? ஆனால் அவர் அதனைச் செய்துள்ளார். அதாவது, கடந்த 1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான மலையாளப் படமான ஓலங்கள் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், 'தும்பி வா தும்பிக் குடத்தின்' என்ற பாடல். இந்தப் பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதே டியூனை பயன்படுத்தி, அதே ஆண்டில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஆட்டோ ராஜா படத்தில் இடம் பெற்ற, 'சங்கத்தில் பாடாத கவிதை' பாடலையும் அமைத்தார்.
ஒரே டியூன்: மீண்டும் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான தெலுங்கு படம் நிரீக்ஷனா. இந்தப் படம் 1986ஆம் ஆண்டு வெளியானது. இதில் இடம் பெற்ற 'ஆகாசம் ஈனதிதோ' என்ற பாடலை அமைத்தார். இந்த பாடலும் அதே டியூன் தான். இந்தப் படத்தில் பானுசந்தர் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்தார். இந்தப் படம் தமிழில் கண்ணே கலைமானே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்திலும் ஒரு பாடல் அதே டியூனில் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலும் அதே டியூன் தான்.
ஆறு பாடல்: அதன் பின்னர் 1996ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான படம் ஆர் ஏக் பிரேம் கஹானி. இந்தப் படத்திலும் அதே டியூனில் ஒரு பாடல் உருவாக்கினார். அதேபோல் 2009 ஆம் ஆண்டு வெளியான மற்றொரு இந்திப் படம் 'பா'. இந்தப் படத்தில் 'கம் சம் கம்' என்ற பாடலும் அதே டியூனில் உருவாக்கப்பட்ட பாடல்தான். இந்த ஆறு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது தொடர்பாக தெரிந்த ரசிகர்கள், அட ஆமாம்.. இசைஞானி இசைஞானி தான்.. என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











