காற்றில் கரைந்த பவதாரணி.. இறுதி சடங்கு எங்கு எப்போது தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணி உடல்நலக்குறைவால் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. 47 வயதே ஆன பவதாரணியின் உயிரிழப்பு ஒட்டுமொத்த இசை பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். அழகான மென்மையான இவரின் குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதையடுத்து, 2000ம் ஆண்டு வெளியான பாரதி என்ற படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலை பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ilaiyaraja daughter bhavatharini funeral when?

இதைத்தொடர்ந்து அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் என முப்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடி உள்ள இவர், ரேவதி இயக்கத்தில் வெளியான மித்ர் மை பிரண்ட் படத்திற்கு இசையும் அமைந்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து, பிர் மிலேங்கே, அமிர்தம், இலக்கணம், மாயநதி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பவதாரணி உயிரிழந்தார்: பித்தப்பையில் இருந்த கல் புற்றுநோயாக மாறி சிறுநீரகத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 5 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். இதில் எந்த சிகிச்சையும் பயன் அளிக்காத நிலையில், கடைசியாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இன்று இறுதிச்சடங்கு: அவரது உடல் நேற்று மாலை விமான மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, இளையராஜாவின் திநகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் நடிகர்கள் சிவக்குமார், ராமராஜன், கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் பவதாரணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது. லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தோட்ட வளாகத்தில் தாய் மற்றும் பாட்டியின் சமாதிகள் அருகிலேயே புதைக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X