'ஆண்மையில்லாத்தனம்' சர்ச்சை: இளையராஜாவுக்கு கஸ்தூரி வேண்டுகோள்
Recommended Video
சென்னை:இளையராஜா சர்ச்சை குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
பிற இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் ஆண்மையில்லாத்தனம் குறித்து தான் பேச்சாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இளையராஜா
இளையராஜா இசையமைப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பேட்டி அளிக்காமல் இருப்பது அவருக்கு நல்லது என்று ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கஸ்தூரியும் அதே வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கஸ்தூரி
மடியும் எண்ணத்தில் இருந்த என் மனதை அவர் இசையால் மாற்றி எனக்கு மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா அவர்கள். கடவுளை கேள்வி கேட்கவேண்டாமே ? என்கிறார் கஸ்தூரி.

ரசிகர்கள்
மடியும் எண்ணம் ஏற்படும் அளவுக்கு கஸ்தூரிக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் இளையராஜா விஷயத்தில் தீவிரமாக உள்ளதால் கஸ்தூரியின் கவலை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் இளையராஜாவிடம் கேள்வி கேட்கக் கூடாது என்ற கஸ்தூரியின் வேண்டுகோள் தவறு என்கிறார்கள் நெட்டிசன்கள்.
மீம்ஸ்
இளையராஜா பேட்டியை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











