என்ன நடக்குமோ நடக்கட்டும்: இளையராஜா விவகாரம் குறித்து எஸ்.பி.பி. வருத்தம்

By Siva

Recommended Video

இளையராஜா விவகாரம்..பேச மறுத்த எஸ்.பி.பி..வீடியோ

சென்னை: இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து பாடுவது குறித்து பேசியுள்ளார் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

தனது பாடல்களை தனது அனுமதி இன்றி இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து இளையராஜாவின் பாடல்களை பாடுவதை நிறுத்திய எஸ்.பி.பி. மீண்டும் துவங்கிவிட்டார்.

அனுமதி

அனுமதி

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை மீண்டும் பாடத் துவங்கிய நிலையில் இளையராஜா மீண்டும் கண்டித்துள்ளார். அதாவது தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடக் கூடாது, மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.

எஸ்.பி.பி.

இளையராஜா ராயல்டி கேட்டு மீண்டும் எச்சரித்துள்ளது குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது, இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என்றார்.

வருத்தம்

வருத்தம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் என்றால் அவரிடம் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்களை பாடுமாறு தான் ரசிகர்கள் அதிக அளவில் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்நிலையில் ராயல்டி பிரச்சனையால் இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத நிலையில் இப்படியாகிவிட்டது.

கவலை

கவலை

ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பார்த்து இருவரின் ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X