twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்துக்கணும்யா விஷால் இளையராஜாவிடம் இருந்து கத்துக்கணும்

    By Siva
    |

    சென்னை: தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டிடத்தை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுப்பதாக இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், யேசுதாஸும் சேர்ந்து பாடியது தான் ஹைலட்.

    Ilaiyaraja to sponsor a building for Cine Musicians union

    தளபதி படத்தில் வந்த காட்டு குயிலு பாடலை அவர்கள் இருவரும் பாட அதை கேட்டு உருகாதவர்களே இல்லை. அவர்கள் பாடியபோது எடுத்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அந்த நாள் ஞாபகம் வந்ததே என்று சொல்ல வைத்துவிட்டது.

    இந்த இசை நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார் இளையராஜா. அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அந்த அறிவிப்பு என்னவென்றால், தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டிடத்தை தன் செலவில் கட்டிக் கொடுக்கிறார் இசைஞானி இளையராஜா.

    இசை சங்க கட்டிடத்தை இசையே கட்டிக் கொடுக்கிறதே அடடே ஆச்சரியக்குறி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கூறி இந்த விஷால் என்ன டிராமா எல்லாம் போட்டார். ஆனால் எங்க ராஜா சாரோ திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டிடத்தை தானே கட்டிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று கூறி ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள்.

    Ilaiyaraja to sponsor a building for Cine Musicians union

    இசை நிகழ்ச்சியில் ராஜா சார் அற்புதமான அறிவிப்பு வெளியிட்டபோதிலும் அதை பற்றி மக்கள் பேசவில்லை. அவர் மேடையில் கோபப்பட்டு செக்யூரிட்டியை திட்டியதை பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். 500 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிவிட்டு 10,000 ரூபாய்க்கான இருக்கையில் பலர் அமர்ந்தனர். இது உங்களுக்கே நியாயமா என்று இளையராஜா மேடையில் கேட்டார்.

    அவர் கேட்டதில் என்ன தப்பு?. கொடுத்த காசுக்கான இடத்தில் அமராமல் வேறு ஒருவரின் இடத்தில் அமர்ந்தால் அவர் கேட்கத் தான் செய்வார். ஆனால் தாங்கள் செய்த தவறை பற்றி யோசிக்காமல் இளையராஜா பேசியது தான் பெரிய குற்றமாக விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இளையராஜாவுக்கு திமிர், அகங்காரம் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத் தான் செய்யும். உங்களை யாரும் அப்படி கஷ்டப்பட்டு அவர் நிகழ்ச்சியை பார்க்கச் சொல்லவில்லை என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

    English summary
    Ilaiyaraja has announced that he will sponsor the building for the Cine musicians' union.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X