ஸ்டண்ட் மாஸ்டர் மீது இலக்கியா பரப்பிய வதந்தி?.. எல்லாமே பப்ளிசிட்டிக்காகவா?.. வெளுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: யூடியூபில் பிரபலமாக அறியப்பட்ட இலக்கியா நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்டோயில், 'தன்னுடைய இறப்புக்கு சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்தான் காரணம்' என குறிப்பிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே அனைத்தும் போலியான செய்தி என்று மீண்டும் அவரே தெரிவித்தார். இப்படி மாற்றி மாற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது.
யூடியூபில் ஒரு சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பிரபலமாகிவிட்டால் சினிமாவில் ஒரு சீனிலாவது தலைகாட்டிவிடலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது. அப்படி சில யூடியூபர்களும் சினிமாவில் நடித்துவிட்டார்கள். அதனை பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். சமீபத்தில்கூட ஏஸ் படத்தில் யூடியூபில் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியா: இப்படி பல யூடியூபர்கள் தங்களது பிரபல்யத்துக்காக ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தவரிசையில் இலக்கியாவும் ஒருவர். அவர் தனது பதிவுகளில் கவர்ச்சியை கொஞ்சம் கூடுதலாகவே காண்பிப்பார். அது பெரும் விவாத பொருள் ஆனது. அதுமட்டுமின்றி அவர் அடிக்கடி துபாய்க்கு பறந்துவிடுவார்; அங்கு சில பார்ட்டிகளில் கலந்துகொண்டு பணம் வாங்கி வருவார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
இலக்கியா கிளப்பிய சர்ச்சை: கடந்த சில காலமாகவே இலக்கியா பற்றி பெரிய பேச்சு எதுவும் பொதுவெளியில் இல்லை. சொல்லப்போனால் அவரை பலரும் மறந்துபோனார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், "என்னுடய சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார். ஆறு வருடங்கள் அவர்கூட இருந்தேன். நிறைய பெண்கள்கூட பழக்கம் இருந்தது அவருக்கு. அதுகுறித்து கேட்டால் என்னை போட்டு அடிக்கிறார். நானும் பொறுத்து பொறுத்து எனக்கு முடியவில்லை. இப்படி ஒன்று நான் போட்டதற்கே என்னை அடிப்பார்" என குறிப்பிட்டிருந்தார்.

மாற்றி பேசிய இலக்கியா: இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இலக்கியா தற்கொலை முயற்சி செய்துகொண்டார்; அவரை போரூரில் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் என்று செய்தி பரவியது. இதனையடுத்து திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திலீப் திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டார். நிலைமை ஒரு மாதிரி சென்றுகொண்டிருக்க இலக்கியாவோ மீண்டும் தனது இன்ஸ்டாவில், "அனைத்துமே போலியான செய்தி" என தெரிவித்தார்.
பப்ளிசிட்டிக்காகவா?: இந்நிலையில் இலக்கியாவை ரசிகர்கள் வெளுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதாவது கடந்த சில காலமாகவே இலக்கியாவுக்கு இருந்த பிரபல்யம் போய்விட்டது. எனவே தன் மீது வெளிச்சம் விழ வேண்டும் என்பதற்காக திலீப் மாஸ்டர் மீது பழி போடுகிறார். எதனால் இப்படி அவர் மாற்றி மாற்றி பேச வேண்டும். திலீப் மாஸ்டர் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவர். அவரது பெயரை பயன்படுத்தி தன் மீது அட்டேன்ஷன் க்ரியேட் செய்யவே இப்படி அவர் பதிவை போட்டார்; இதெல்லாம் இலக்கியாவுக்கு தேவையில்லாத வேலை என்று கழுவி கழுவி ஊற்றிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











