21 வயதில் விவாகரத்து.. விரக்தியில் தற்கொலை எண்ணம் வந்தது.. ஸ்வர்ணமால்யா பேட்டி!
சென்னை: இளமை புதுமை ஸ்வர்ணமால்யா தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "இளமை புதுமை" இளமை துள்ளலான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான இவர், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார்.
தொகுப்பாளராக வலம் வந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இளமை புதுமை ஸ்வர்ணமால்யா: தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பன்முக நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஸ்வர்ணமால்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இளமை புதுமையில் நிகழ்ச்சியில் நான் தொகுப்பாளினியான போது 12வது படித்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அந்த நிகழ்ச்சியில், துருதுருனு இருப்பேன், ஆனால், உண்மையில் நான் அப்படி இல்லை. எப்போதும் சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடியவள் என்றார்.
21 வயதில் விவாகரத்து: தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேசிய ஸ்வர்ணமால்யா, 21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. விவாகரத்திற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. எனக்கு 21 வயசு அவருக்கு 25 வயசுதான் அந்த வயதில் எது சரி, எது தவறு என்று எங்களுக்கு தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் எனக்கு அமெரிக்க வாழ்க்கை செட் ஆகவில்லை.
தற்கொலை எண்ணம்: விவாகரத்தான பிறகு என்னை விட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் கஷ்டப்படக்கூடாது என்று என்னை அவர்கள் படிக்க சொன்னார்கள். அதன் பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்ட போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா எதற்கு இப்படி வாழுகிறோம் என்று தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ஸ்வர்ணமால்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











