வாங்க அமிதாப் மாமா.. ட்விட்டரில் இணைந்த இளவரசு.. மீம் போட்டு வரவேற்ற ரசிகர்கள்!

சென்னை: குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தூள் கிளப்பி வரும் நடிகர் இளவரசு சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார்.

நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பாக கருத்தம்மா உள்ளிட்ட 13 படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளர்.

நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடங்களிலும், நெகட்டிவ் ரோல்களிலும் நடித்து வரும் இளவரசு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்துள்ளார்.

13 படங்களுக்கு கேமராமேன்

13 படங்களுக்கு கேமராமேன்

1994ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இளவரசு, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, நினைத்தேன் வந்தாய், இனியவளே, மனம் விரும்புதே உன்னை, வீரநடை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இளவரசு பணியாற்றி உள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்தில் போட்டோகிராஃபர் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் இளவரசு. பெரும்பாலும், பாரதிராஜா படங்களிலும், சேரன் படங்களிலும் நடித்து பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

ட்விட்டரில் இணைந்தார்

ட்விட்டரில் இணைந்தார்

இந்த லாக்டவுனில் திரைப்பட ஷூட்டிங் இல்லாததால், பல பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் இளவரசு, "அனைவருக்கும் வணக்கம் இது எனது முதல் ட்வீட்.. உங்களுடன் ட்விட்டரில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டு, ட்விட்டரில் இணைந்துள்ளார்.

வெல்கம் அமிதாப் மாமா

வெல்கம் அமிதாப் மாமா

கலகலப்பு படத்தில் அமிதாப் மாமா எனும் ரோலில் நடிகர் இளவரசு சிறப்பாக நடித்து பலரையும் சிரிக்க வைத்து இருப்பார். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா அவரை கலாய்க்கும் காட்சியை மீமாக போட்டு, "வெல்கம் டு ட்விட்டர் அமிதாப் மாமா" என அவரது ரசிகர்கள் மீம் போட்டு வரவேற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X