அட போயா மகன் ஜீவாவுக்கு ஒரு படமும் ஓட மாட்டுது.. கடைசி காலத்தில் ஆர்.பி.சௌத்ரியின் புலம்பல்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி.சௌத்ரி. ஏராளமான ஹிட் படங்களை தயாரித்திருக்கும் அவர்தான் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை என்பது அனைவரும் அறிந்தது. சூழல் இப்படி இருக்க நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானை சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி மலையாளத்தில்தான் முதலில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனையடுத்து தமிழில் இயக்குநர் விக்ரமன் இயக்குநராக அறிமுகமான புது வசந்தம் படத்தை தயாரித்து கோலிவுட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் ஆர்.பி.சௌத்ரி. அப்போதிருந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஏகப்பட்ட ஹிட் படங்களை தயாரித்திருக்கும் அந்நிறுவனம்; எக்கச்சக்கமான இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், நாட்டாமை, சேரன் பாண்டியன், பூவே உனக்காக என பல படங்கள் மெகா ஹிட்.

சௌத்ரியின் ஸ்பெஷல்: சௌத்ரியை பொறுத்தவரை ஒரு தயாரிப்பாளராக அத்தனையும் சரியாக இருக்க வேண்டும் நினைப்பவர். அதனால்தான் அவர் தயாரித்த படங்கள் எல்லாம் சரியாக திட்டமிட்ட தேதியில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ரிலீஸாகின. முக்கியமாக கதை விஷயத்திலும் சௌத்ரி கொஞ்சம் கறார்தான். மேலும் குடும்பங்களை கவரும் வகையிலான கதைகளைத்தான் திரைப்படங்களாக எடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலும் முயன்றவர். அவரது அந்த ஃபார்முலா உண்மையில் சக்சஸும் ஆனது.
சாலை விபத்தில் ஆர்.பி.சௌத்ரி: இதுவரை 99 படங்களை அந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருப்பவருமான விஜய்யை வைத்து 100வது படத்தை தயாரிக்க ஆசைப்பட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக சௌத்ரி உயிரிழந்தார். அவருக்கு வயது 76 ஆகும். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.
கலங்க வைத்த ஜீவா: நேற்று தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஜீவா கதறி அழுதபடி ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வீடியோ அனைவரையுமே உருக வைத்துவிட்டது. சௌத்ரியின் உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ஆறுதல் தெரிவித்திருக்கிறது. இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது. 100வது படத்தை தயாரித்திட வேண்டும் என்கிற ஆசை அவருக்கு நிறைவேறாமல் போனது உண்மையில் ஒரு கெடு வாய்ப்புதான். இந்நிலையில் இளவரசுவின் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
இளவரசு பேச்சு: தலைவர் தம்பி தலைமையில் பட விழாவில் பேசிய இளவரசு, "சௌத்ரி சாருக்கு ஃபோன் செய்து சார் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டால்; ஹீரோ யாரு யா என்று கேட்பார். ஜீவாதான் சார் என்று சொன்னால், 'யோவ் போயா அவனுக்கு ஒரு படமும் ஓட மாட்டுது.நானே அவனை வைத்து படம் எடுப்பதில்லை. வேறு யாராவது ஹீரோ இருந்தால் சொல்லுங்கள்' என கூறுவார். இப்படித்தான் ஜீவா வளர்ந்தார். எவ்வள்வு ஒழுக்கமாக வளர்ந்திருப்பார். ஜீவா மாதிரி ஒரு ஹீரோவை நான் பாராட்டுவதற்கு அவரிடம் இருக்கும் நேர்மை" என்றார்.


Click it and Unblock the Notifications
