இளையராஜா பயோபிக்கிற்கு என்னதான் ஆச்சு?.. ட்ராப் செய்துவிட்டார்களா?.. தீயாய் பரவும் தகவல்

சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் தற்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி படமானது வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவரது பயோபிக் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். கமல் ஹாசன் திரைக்கதை எழுத; அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இளையராஜாவை தவிர்த்துவிட்டு தமிழர்களால் ஒரு நாளை கடந்துவிட முடியாது என்பதுதான் உண்மை. அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் பல வருடங்களாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து தலைமுறையினரும் இளையராஜாவை கொண்டாடிவருகின்றனர். அவரது ஒவ்வொரு பாடலும் தங்களது மனதுக்கு மருந்திடுவதாகவும்; அவர் ஒரு தேவதூதன் என்றும் உச்சத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரை தமிழர்கள். மேலும் பல இசையமைப்பாளர்களும்கூட இளையராஜா போட்ட வழியில்தான் தாங்கள் பயணிக்கிறோம் என்றும் கூறுவதுண்டு.

ilayaraaja dhanush

1000க்கும் மேற்பட்ட படங்கள்: இளையராஜா இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் வரும் பின்னணி இசையோ பாடலோ அடுத்த படத்தில் வரும் பின்னணி இசை, பாடல் போல் இதுவரை இருந்ததில்லை. அந்த அளவுக்கு அவருக்குள் இசை ரத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் இந்தக் கால தலைமுறையினரும் இளையராஜாவை வெகுவாகவே ரசித்து வருகிறார்கள். அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை 2 வெளியாகவிருக்கிறது.

தினம் தினமும் உன் நினைப்பு: அந்தப் படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. முக்கியமாக தினம் தினமும் உன் நினைப்பு பாடலை இளையராஜா இசையமைத்து பாடியிருக்கும் விதம் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதற்கிடையே இளையராஜா மீது சில விமர்சனங்களும் எழுவதுண்டு. அதாவது அவர் தற்பெருமைக்காரர், தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் பலர் சொல்வார்கள்.

இளையராஜா பயோபிக்: ஆனால் ராஜாவின் ரசிகர்களோ அப்படி அவர் இருப்பதில் ஒரு தவறும் இல்லை என்று கூறுவதுண்டு. இதற்கிடையே இளையராஜாவின் பயோபிக் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. அதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க, கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் அறிவிப்போடு சரி; அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து எதுவுமே இதுவரை தெரியவில்லை.

படம் ட்ராப்பாகிவிட்டதா?: இதனையடுத்து படம் ட்ராப்பாகிவிட்டதோ என்று தகவல்கள் பரவின. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தற்போது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதிலிருந்து கமல் ஹாசன் வெளியேறிவிட்டார் என்றும்; இளையராஜாவுடன் தனுஷுக்கு சில மனஸ்தாபங்கள் வந்துவிட்டதால் அவரும் வெளியேற முடிவு செய்திருப்பதாகவும்; படம் ட்ராபாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X