பஞ்சாயத்துனு யாருப்பா சொன்னது?.. பிரேம்ஜி - இந்துவுக்கு பரிசு வழங்கிய இளையராஜா?
சென்னை: கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். ஆனால் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனால் கங்கை அமரன் குடும்பத்துக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க இளையராஜா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் GOAT படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் அவர்; அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் இப்படத்தில் எந்த மாதிரி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

நோ திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து கேட்டால் ஜாலியான பதிலையே சொல்வார். அதேபோல் தான் அணிந்து வந்த டி ஷர்ட்டுக்களிலும் பெரும்பாலும் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள்; ஒருவேளை பிரேம்ஜிக்கு திருமணம் மீது சுத்தமாக ஆசை இல்லையோ என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பிவந்தனர்.
சிம்ப்பிளாக முடிந்த திருமணம்: இந்தச் சூழலில் திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இத்திருமணத்தில் பிரேம்ஜியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
வராத இளையராஜா: பிரேம்ஜியும், இந்துவும் முதலில் முகநூலில் பழகினார்கள்; அந்தப் பழக்கம் காதலாக மாறியது என்று பேசப்பட்டது. இதற்கிடையே பிரேம்ஜியின் திருமணத்துக்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் வரவில்லை. இதனால் ஏதேனும் பஞ்சாயத்து ஓடுகிறதோ என்று சந்தேகங்களை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிவந்தர்கள். மேலும் சார்லியின் மகன் கலயாணத்தில் கலந்துகொண்ட இளையராஜா பிரேம்ஜி திருமணத்துக்கு ஏன் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இருந்தாலும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று இளையராஜாவின் ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசீர்வதித்த இளையராஜா: இந்நிலையில் இளையராஜா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி திருமணத்துக்கு முன்னதாகவே பிரேம்ஜியையும், இந்துவையும் தனது வீட்டுக்கு அழைத்து ஆசீர்வதித்து; பரிசு ஒன்றை இளையராஜா கொடுத்ததாகவும்; மேலும் திருமண வாழ்க்கை குறித்து சில அறிவுரைகளையும் வழங்கினார் என்றும் சொல்லபப்டுகிறது. அதுமட்டுமின்றி இசை பணியில் பிஸியாக இருந்ததால்தான் அவரால் திருமணத்துக்கு வரமுடியவில்லை என்றும் ஒரு தகவல் ஓடுகிறது.


Click it and Unblock the Notifications











