கிடாபூசாரி மகுடி... இளையராஜா இசையில் உருவாகும் கிராமத்துப் படம்!
இசைஞானி இளையராஜா இசையில் கிடாபூசாரி மகுடி எனும் தலைப்பில் புதிய படம் உருவாகிறது.
தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் இது. தமிழ், ராம்தேவ் என இரு புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் வேலு பிரபாகரன், ராம் கிரிஷ்மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தின் கதையை இளையராஜாவிடம் சொல்லி, நீங்கள் இசையமைத்தால்தான் இந்தப் படத்துக்கு அர்த்தம் கிடைக்கும் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டாராம். கதை பிடித்ததால், இளையராஜாவும் உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம்.


Click it and Unblock the Notifications











