Bhavatharani: குழந்தை இல்லைனு வருத்தப்பட்ட பவதாரிணி.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று உள்ளார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பவதாரணி குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், இசைஞானி இளையராஜா வீட்டில் எப்போதும் இசை சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும், அப்போது இளையராஜா காத்திக் ராஜா, யுவுன் சங்கர் ராஜாவிற்குத் தான் இசையை சொல்லிக் கொண்டு இருப்பார். ஆனால், பவதாரணிக்கு இசை கற்றக்கொடுக்கவில்லை என்றாலும் இவருக்குத்தான் இசையில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நேரத்தில் தான் மை டியர் குட்டிசாத்தான் படத்தில் பவதாரணி ஒரு பாட்டுபாடினார்.

ilayaraaja daughter bhavatharani passed away Bayilvan Ranganathan open talks about disease

அதன் பிறகு பலத் திரைப்படங்களில் பாடிய பவதாரணி, பிரபுதேவா நடித்த ராசாய்யா படத்தில் காதல் வானிலேயே என்ற பாடலை பாடினார். அதன்பின் பாரதி, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். பவதாரணி பாடகியாக மட்டுமில்லாமல், ஒரு சில திரைப்படத்திற்கு இசையும், இசை ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்: பவதாரணி எஸ்.என். ராமச்சந்திரன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் இல்லற வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால், பவதாரணி கணவரை விட்டு பிரிந்து, தந்தை இளையராஜாவுடனே வசிந்து வந்தார். இவரின் மனைவி என்பதைவிட இளையராஜாவின் மகள் என்பதில் பவதாரணி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். 47 வயதான பவதாரணியின் ஒரே வருத்தம் குழந்தை இல்லை என்பது மட்டும் தான்

இலங்கையில் சிகிச்சை: கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது. இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு, சிகிச்சை எடுக்க சென்றார். ஆனால், அது பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

தேனியில் இறுதி சடங்கு: பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இரவு10 மணிக்குப் பின் பவதாரிணியின் உடல் சாலை மார்க்கமாக இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X