Bhavatharani Passed Away - உயிரிழந்தார் இளையராஜாவின் மகள்.. குயில் போன்ற குரலுடைய பவதாரணி பற்றி தெரியுமா?

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். தனது தந்தையின் இசை மட்டுமின்றி தேவா, சிற்பி போன்ற இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றிய அவர் பத்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த சூழலில் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசைஞானி என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்கள் இருக்கிறார்கள். பவதாரிணி என்ற மகள் இருந்தார். தனது தந்தை மற்றும் சகோதரர்கள் போலவே தமிழ் திரையிசையில் தனித்து ஜொலித்தவர் பவதாரிணி. ஏராளமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட ஜானகியின் குரலை ஒத்திருக்கும் அவரது குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Ilayaraaja Daughter Bhavatharani Passed Away Here is the Full Details about her

ராசய்யா: இளையராஜாவுக்கு கடந்த 1976ஆம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. இசைஞானி பிறந்ததால் இயல்பாகவே அவருக்கு இசை மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. இதனையடுத்து முறையாக இசை பயிற்சி பெற்றுக்கொண்ட அவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் இடம்பெற்ற 'காதல் வானிலே' பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். பொதுவாக எஸ்பிபியுடன் பாடும்போது ஸ்கோர் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். அந்தத் தனித்திறமை தனக்கு இருக்கிறது என்பதை முதல் பாடலிலேயே நிரூபித்துவிட்டார் பவதாரணி.

தொடர் வாய்ப்புகள்: முதல் பாடல் மெகா ஹிட்டானதை அடுத்து தேடினேன் வந்தது படத்தில் சிற்பி இசையமைத்த ஆல்ப்ஸ் மலைக்காற்று பாடலை ஹரிஹரனுடன் சேர்ந்து பாடினார். அதனையடுத்து இளையராஜா இசையமைப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற, 'இது சங்கீத திருநாளோ', 'என்னை தாலாட்ட வருவாளா 'டூயட் வெர்ஷன்,'ஓ பேபி' ஆகிய பாடல்களை பாடி அசத்தினார். மேலும் டைம் படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து, 'தவிக்கிறேன் தவிக்கிறேன்' என்ற பாடலை பாடி ஒட்டுமொத்த கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினார்.

தேசிய விருது: அவரது கரியரில் முக்கியமான பாடல்களில் ஒன்று பாரதி படத்தி இடம்பெற்ற, 'மயில் போல பொண்னு ஒன்னு' பாடல். இளையராஜா இசையமைத்த அந்தப் பாடலை பாடிய அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது (2001) கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அழகி படத்தில் இடம்பெற்ற 'ஒளியிலே தெரிவது தேவதையா'பாடலை கார்த்திக்கோடு பாடி அதகளம் செய்திருந்தார் பவதாரணி.

பீக்கில் இருந்த பாடகி: 2000களில் பவதாரணி பீக்கில் இருந்தார். பிரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற, 'தென்றல் வரும் வழியை', ஒருநாள் ஒரு கனவு படத்தில் இடம்பெற்ற, 'காற்றில் வரும் கீதமே', அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தில் இடம்பெற்ற, 'இலையுதிர் காலம்', தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற 'தாலியே தேவையில்லை' என பல பாடல்களை பாடின் தன்னை மிகசிறந்த பாடகியாக நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவர் கடைசியாக அனேகன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான, 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலை பாடியிருந்தார்.

இசையமைப்பாளர்: பவதாரணி பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர். 2002ஆம் ஆண்டு வெளியான Mitr My Friend படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தெலுங்கில் அவுனா படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் கன்னடத்தில் வெளியான கீயா கீயா படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். மேலும் தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, போரிட பழகு, கள்வர்கள், மாயநதி ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

என்னைவிட டேலண்ட்: தற்போது முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா ஒரு விழாவில் பேசியபோது, "பவதாரணி என்னைவிட திறமை வாய்ந்தவர். அவர் எல்லாம் முறையாக இசை கற்றுக்கொண்டு பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

உயிரிழப்பு: இந்த சூழலில் அவருக்கு புற்றுநோய் வந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்தார். ஆயுர்வேத சிகிச்சைகாக இலங்கைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். அவரது உடல் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. இறுதிச்சடங்கு எப்போது; எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் இனிதான் தெரியவரும். அவரது உயிரிழப்பு இளையராஜா குடும்பத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X