யுவனின் 3வது திருமணம்.. முறைத்துக்கொண்ட இளையராஜா.. சமாதானம் செய்த பவதாரிணி.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். 100 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அவரது இசையமைப்பில் கடைசியாக அவர் நேசிப்பாயா, ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக கவனிக்கப்படவில்லை.

கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

Ilayaraaja initially did not Accept of Yuvan Shankar Raja s third marriage
Photo Credit:

உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் அவர் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.

யுவனின் படங்கள்: யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கடைசியாக நேசிப்பாயா, ஸ்வீட் ஹார்ட், அகத்தியா ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களிலுமே இசை சுமார் ரகம்தான் என்ற பெயரை பெற்றது. இதற்கிடையே யுவன் ஷங்கர் ராஜா முதலில் இரண்டு திருமணங்கள் செய்து அது செட் ஆகாததால் அதிலிருந்து வெளியே வந்தார். பிறகு இஸ்லாமிய மதத்துக்கு மாறி அந்த மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

சபிதா ஜோசப் பேட்டி: அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "யுவன் ஷங்கர் ராஜா முதலில் இரண்டு திருமணங்கள் செய்து அது செட் ஆகாததால் வெளியே வந்தார். மூன்றாவதாக இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அத்திருமணத்தை யுவன் செய்தபோது முதலில் இளையராஜா முறைத்துக்கொண்டது உண்மைதான்.

சமாதானம் செய்த பவதாரிணி: ஆனால் பவதாரிணிதான் இளையராஜாவிடம் சென்று, யுவனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செட் ஆகவில்லை. இந்தத் திருமணத்திலாவது சந்தோஷமாக இருக்கட்டும். அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துங்கள். ஏன் இந்த கோபமெல்லாம் என்று கேட்டார். பிறகுதான் ராஜா ஏற்றுக்கொண்டார்" என்றார். புற்றுநோய் காரணமாக கடந்த வருடம் பவதாரிணி உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X