பிசாசுக்கு இசையமைக்க மறுக்கும் இசைஞானி?
பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்துக்கு இளையராஜா இசையமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு.
இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. தன் படங்களுக்கு இளையராஜா இசை இருக்க வேண்டும் என்பதில் தீவிர பிடிவாதம் கொண்டவர் மிஷ்கின்.

கடந்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அவர் இசைக்காகவே பெரிதும் பேசப்பட்டது.
மிஷ்கின் - பாலா கூட்டுப் படம் என்பதால் "பிசாசு" படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
காரணம், இந்தப் படத்தின் தலைப்பு மிகவும் எதிர்மறை உணர்வுடன் உள்ளதாக ராஜா கருதுவதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும் ராஜாவை சமாதானப்படுத்த மிஷ்கின் தரப்பு முயன்று வருகிறதாம். எதற்கும் இருக்கட்டும் என்று மிஷ்கினின் முந்தைய இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவையும் ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











