இளையராஜா கச்சேரி வேறு தேதிக்கு தள்ளி வைப்பு!

By Shankar

Ilayaraaja
சென்னை: சாண்டி புயல் பாதிப்பு காரணமாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை இளையராஜாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவிலும், தொடர்ந்து அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலும் நடக்கவிருந்தது.

இதில் கனடா நிகழ்ச்சிக்கு தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. மாவீரர் தினம் கொண்டாடப்படும் நவம்பர் மாதத்தை துக்கமாதம் என்றும், அதில் எந்த கொண்டாட்ட நிகழ்ச்சியும் கூடாதென்றும் அவை கேட்டுக் கொண்டன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இந்த நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

ஆனால் நிகழ்ச்சி நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஒரேயொரு ரசிகர் இருந்தாலும் கச்சேரி நடத்துவேன் என்றார் இளையராஜா.

இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டி புயல் தீவிரமடைந்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டதால் இளையராஜாவின் கனடா பயணம் ரத்து செய்யப்பட்டது. இசைக் கலைஞர்களும் போகவில்லை.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "சான்டி புயல் பாதிப்பு காரணமாக, எனது பயணம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை வேறு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாமல் வந்து எப்போதும் போல ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

இசை நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X