நான் பார்த்தபடி... - இளையராஜாவின் புகைப்படக் கண்காட்சி
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு சிறந்த புகைப்படக்காரராகத் திகழ்பவர் இளையராஜா.
எந்த தேசத்துக்குப் போனாலும் கையோடு தன் புகைப்படக் கருவியையும் கொண்டு செல்லும் அவர், தன் இசைக்கு நிகரான அழகியலுடன் படங்களை எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்ப நாட்களிலிருந்து அவர் இப்படி எடுத்து வைத்துள்ள புகைப்படங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.

நான் பார்த்தபடி - கண்காட்சி
முதல் முறையாக அவற்றிலிருந்து ஒரு நூறு படங்களை மட்டும் தேர்வு செய்து கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள், சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஓவியக் கூடத்தில்.

கமல்ஹாஸன்
இந்த புகைப்படக் கண்காட்சியை பொங்கலன்று கலைஞானி கமல்ஹாஸன் திறந்து வைத்தார். இயக்குநர் பாலு மகேந்திரா, பார்த்திபன், மிஷ்கின், பிசி ஸ்ரீராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கேமராமேன்களுக்கு வேலை இருந்திருக்காது
கமல் பேசுகையில், "இளையராஜா இசையில் எவ்வளவு வித்தகம் பெற்றவரோ அதே போல புகைப்படம் எடுப்பதிலும் வித்தகம் பெற்றவர். அவர் கையில் இப்போதும் கேமரா மட்டும் இருந்திருந்தால் பல கேமராமேன்களுக்கு வேலையிருந்திருக்காது. நல்லவேளை அது நடக்கவில்லை. நான் அப்போதே நினைத்தேன். இவைகளெல்லாம் ஒருநாள் கண்காட்சியாக வைக்கப்படும் என்று. அதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. பல்வேறு திறமைகள் படைத்த இளையராஜா இன்னும் பல திறமைகள் படைத்து அதையும் வெளிப்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது," என்று பேசினார்.

22-ம் தேதி வரை
இந்த கண்காட்சி ஜனவரி 15 ம் தேதி தொடங்கியது. 22 ம் தேதிவரை சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











