அந்தப் பழக்கத்தை நான் நிறுத்தினேன்.. ஹாயாக இருந்தேன்.. அட இளையராஜா வேற லெவல் ப்பா

சென்னை: இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா தற்போதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது, சிம்பொனி உருவாக்குவது என தன்னை எப்போதும் இசையோடு தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரது இசையில் கடைசியாக விடுதலை 2 , தினசரி ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில்கூட தன்னுடைய சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றிவிட்டு வந்தார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 50 வருடங்களாக தமிழ் சமூகத்துக்கு இசை பங்களிப்பை செய்துவருகிறார். அவரது இசையை தமிழர்கள் ஒரு நாளும் கேட்காமல் அந்த நாளை கடத்த முடியாது. அந்த அளவுக்கு அவரது இசை தாக்கம் நிறைந்திருக்கிறது. இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களுக்கும் பயங்கரமான போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் தற்போதைய தலைமுறையினரையும் தன்னுடைய இசையை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

Ilayaraaja said in an interview that he has stopped watching TV

பிஸி இசையமைப்பாளர்: அவரது இசையமைப்பில் கடைசியாக ஜமா, விடுதலை 2, தினசரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றி தினசரி தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. முக்கியமாக வெற்றிமாறன் இயக்கத்தி வெளியான விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் அனைவரையும் ரசித்தது. இடைவேளை காட்சியில் அவர் போட்டி பிஜிஎம் பக்காவாக இருந்தது என்று படம் பார்த்தபோதே ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பொனி ராஜா: சூழல் இப்படி சமீபத்தில் தனது சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றினார். இந்தியாவிலிருந்து இளையராஜாதான் சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் ஆவார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்கள். மேலும் லண்டனில் அரங்கேற்றிய அந்த சிம்பொனி இசையை தமிழ்நாட்டிலும் இசை கச்சேரி வைத்து வாசித்து காண்பிக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ராஜாவின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இசையமைக்கும்போது ஒவ்வொரு ஸ்வரத்தின் இனிமையை ரசிக்கிறேன். அதன் காரணமாகத்தான் எனது பாடல்கள் மக்களுக்கு பிடிக்கின்றன. இசையால் இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒரு வரையறைக்குள் அடங்கிவிடும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இசையமைத்தால் அதில் ரசனைதான் முக்கியமாக இருக்கும். நானே நல்ல ரசிகன் என்பதால்தான் நான் உருவாக்கும் பாடல்களை மக்களும் ரசிக்கிறார்கள்.

அவற்றை விட்டுவிட்டேன்: பத்திரிகை படிப்பது, டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஹாயாக இருந்தேன். நான் ஒரு திரைப்படத்துக்கு பின்னணி இசையமைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வேன். ஒருமுறை 58 படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறேன். நான் இரண்டு நாட்களில் ஆறு பாடல்களுக்கான ட்யூன்கள் எல்லாம் கொடுத்திருக்கிறேன். புதிதாக யார் வந்தாலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைப்பேன். அப்படித்தான் எனக்கு அறிமுகமில்லாத பாலு மகேந்திரா, மணிரத்னம் படங்களுக்கும் இசையமைத்து பாடல்களை உருவாக்கினேன். அனைத்து படங்களிலிருந்து கற்றுக்கொள்வேன். ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை கொடுக்கும். அதிலிருந்து பாடம் பெறுவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X