சினிமாவில் ஏன் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை.. கேள்வி கேட்ட ரசிகை.. தக் லைஃப் பதில் கொடுத்த இளையராஜா

சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லை உலகம் முழுவதுமே ஆண்கள் தான் அனைத்து துறைகளிலும் நிறைந்து காணப்படுகின்றார்கள். பெண்கள் கடந்த சில தசாப்த காலங்களாகத்தான் அனைத்து துறைகளிலும் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல், அங்கு தடம் பதித்தும் வருகின்றார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறை மட்டும் என்ன விதிவிலக்கா? குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் கோடான கோடிக்கணக்கான பெண்கள் அடுப்படியை விட்டே வெளியே வரமுடியாமல் குடும்ப சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ரசிகை ஒருவர், சினிமாவில் அதிக அளவில் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை? எனக் கேள்வி கேட்டதும், அதற்கு இளையராஜா பதில் அளித்ததும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவின் பொக்கிசங்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இசையமைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் ஜமா என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாகவே இளையராஜா என்றால் சர்ச்சை ராஜா என அழைக்கும் அளவிற்கு அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக பாடலுக்கு ராயல்டி கோரும் விஷயம் தொடங்கி, இசை பெரியதா அல்லது மொழி (சொற்கள்) பெரியதா என்ற கேள்வியும் அவரைச் சுற்றிக்கொண்டே உள்ளது.

ilayaraaja

மேற்குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக இளையராஜாவைச் சுற்றி பல விவாதங்கள் விமர்சனங்கள் இருந்தாலும் இளையராஜா இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலைகளில் கவனமாக இருக்கின்றார். குறிப்பாக அவரது அன்பு மகள் பவதாரணி மறைவுகுப் பின்னர் இளையராஜா முடங்கிவிடுவார் என பலரும் கூறினர். ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கி தனது ரசிகர்களுக்காக புது சிம்ஃபொனியையே உருவாக்கி அசத்தினார்.

யூடியூப் சேனல்: தற்போது அதாவது நேற்று முன்தினம் இளையராஜா தனது இசைக்கோர்ப்புகளையும் பாடல்களையும் பின்னணி இசையையும் வெளியிடும் வகையில், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் இந்த யூடியூப் சேனலை எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் தொடங்கியுள்ளார். இதில் தனது பின்னணி இசைகள் தொடங்கி, சிம்பொனி, இசைக்கச்சேரிகள் என பலவற்றை பதிவிடப்போகின்றார் என கூறப்படுகின்றது.இது இளையராஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ilayaraaja

தக்-லைஃப்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகை ஒருவர் சினிமாவில் ஏன் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லை எனக் கேட்டபோது, இளையராஜா உடனே சற்றும் யோசிக்காமல், "நீ வாயேன், வந்துடு வந்துடு.. யோசிக்கவே வேண்டாம், ஆல் த பெஸ்ட்" எனக் கூறினார். இந்தப் பதிலைக் கேட்ட அனைவரும் அரங்கம் அதிர கைதட்டினர்.

பெண் இசை அமைப்பாளர்: தமிழ் சினிமாவில் இப்போதுதான் சில பெண் இயக்குநர்கள் உருவாகியுள்ளனர். இசை அமைப்பாளர்களைப் பொறுத்தவரையில், சில பெண் இசை அமைப்பாளர்களும் உள்ளனர். அண்மையில் கூட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன மின்மினி படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ilayaraaja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X