ரஜினி படத்தை இயக்கவிருந்த இளையராஜா.. அட மிஸ் ஆகிடுச்சே.. என்ன படம் தெரியுமா?
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறனர். இந்தச் சூழலில் இளையராஜாவே ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அதுவும் ரஜினிகாந்த் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.

பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சர்ச்சைகளும்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டு செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. கடைசியாக ஜம அபடம் வெளியானது. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக் எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.
இளையராஜா பேட்டி: இந்நிலையில் இளையராஜா இயக்குநர் கௌதம் மேனனுடன் செய்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், "ஒருமுறை ரஜினிகாந்த் என்னிடம் வந்து பாஸ்கருக்கு (இளையராஜாவின் சகோதரர்)ஒரு படம் பண்ணி தரேன் சாமி என்று சொன்னார். மேலும் அதை நீங்களே இயக்குங்கள். படத்துக்கு பெயர் வையுங்கள் என்று சொன்னார்.
ராஜாதி ராஜா: அப்போது நான் ராஜாதி ராஜா என்று சொன்னேன். உடனே அவர் ஏன் ராஜாதி ராஜா என்றார். அதற்கு நான், 'நான் ராஜா. என்னைவிட பெரிய ஆள் நீங்கள். எனவேதான் ராஜாதி ராஜா' என்று கூறினேன். அவர் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி அவர் என்னிடம், இது நல்லாருக்கும் சாமி. ராமனாகிய நீங்கள் படத்தை இயக்க; ராவணனாகிய நான் நடிக்க சூப்பரா இருக்கும் என்று சொன்னார். உடனே நான், செட்டில் நான் டைரக்ட் செய்யும்போதுதான் யார் ராவணன், ராமன் என்று தெரியும் என சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











