Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இளையராஜா இசைன்னா எந்த மொழி படமானாலும் விருது கன்ஃபார்ம்...இப்போ என்ன விருது?
சென்னை : இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் ஒன்றிற்கு மிகப் பெரிய அங்கீகாரமாக சிறந்த இசைக்கான சர்வதேச விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இது இசை ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
1970 களில் துவங்கி தற்போது வரை தமிழ் சினிமா மட்டுமின்றி பல்வேறு மொழி சினிமாவிலும் இசையின் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவிற்கு விருதுகளும், பாராட்டுக்களும் புதிதல்ல. ஆனாலும் தற்போது கிடைத்துள்ள கெரளவம் அவரது ரசிகர்களை பல மடங்கு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
தியேட்டர்ல போயி ட்ரெயிலரை என்ஜாய் பண்ணுங்க... நெல்சன் ட்வீட்!

ஒரே நேரத்தில் 20 படங்கள்
மனதை மயக்கும் இசை என்றாலே அதற்கு மறுபெயர் இளையராஜா தான். பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து, எழுதி, பாடி உள்ளார் இளையராஜா. இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் கிட்டதட்ட 20 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் A Beautiful Breakup என்ற ஆங்கில படமும் ஒன்று.

இளையராஜாவின் 1422வது படம்
இந்தோ-ஆங்கில படமான இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான 5 Natures Movies International தயாரித்துள்ளது. இந்த படத்தில் புதுமுகங்களான கிருஷ், Matylda ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் 1422வது படமாகும்.

இளையராஜாவுக்கு சர்வதேச விருது
இந்த படத்திற்காக இளையராஜாவிற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதுவும் Amsterdam சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சந்தோஷமாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்து விட்டு, இளையராஜா இசைனாலே எந்த மொழி படமாக இருந்தாலும் அதற்கு விருது கன்ஃபார்ம் என இளையராஜாவின் ரசிகர்கள் பெருமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சர்வதேச அங்கீகாரம்
A Beautiful Breakup படத்திற்காக 30 க்கும் மேற்பட்ட soundtrack களை இளையராஜா உருவாக்கி உள்ளார். இவைகள் சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை அஜித்வாசன் உக்கினா என்பவர் இயக்கி உள்ளார். கே.குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.