கலை உலகை ஆ...ஹா என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்.. கமலுக்கு இளையராஜா வாழ்த்து!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல் ஹாசன் விரைவில் நலம்பெற்ற வீடு திரும்ப வேண்டும் என இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் கதர் ஆடையை அறிமுகம் செய்வதற்காக அமெரிக்கா சென்றார்.
பின்னர் சிகாகோவில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார்.

மருத்துவ பரிசோதனை
இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் காய்ச்சல், இருமல் என உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல் ஹாசன் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை
நடிகர் கமல்ஹாசன் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என பல்வேறு இடங்களில் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நலமாக வரவேண்டும் சகோதரரே
அந்த வகையில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்தி டிவிட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நலமாக வரவேண்டும் சகோதரரே.. கலை உலகை ஆ......ஹா...... என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்... என பதிவிட்டுள்ளார்.

விரைவில் ரசிகர்களை சந்திப்பார்
நேற்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதனிடையே நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது மகளான நடிகை ஸ்ருதிஹாசன் டிவிட்டியுள்ளார். மேலும் விரைவில் அவர் ரசிகர்களை சந்திப்பார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











