Ilayaraja 75: நான் அரசியலுக்கு வர இளையராஜா தான் காரணம்... மேடையில் ரகசியத்தை உடைத்த கமல்
Recommended Video

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் என இரண்டு நாட்கள் இந்நிகழ்ச்சியில் நடந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியும், சில பாடல்களை பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டாவது நாளான நேற்று இளையராஜாவே தனது பாடல்களை, பல இசை கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பாட்டுப் பாடி அசத்திய கமல்
கமல் தனது மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து இரண்டு பாடல்கள், மற்றவர்களுடன் சேர்ந்து மூன்று பாடல்கள் என மொத்தம் ஐந்து பாடல்களை பாடினார். இதில் ஸ்ருதியுடன் சேர்ந்து அவர் பாடிய ஹே ராம் பாடலும், குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கியதுடன், அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தனது அன்பை கமல் வெளிப்படுத்தினார்.

ராஜா மீதான காதல்
பின்னர் பேசிய அவர், "எனக்கும் ராஜாவுக்கும் இடையே இருப்பது 45 வருடக் காதல். இது அதையும் தாண்டி புனிதமானது. இத்தனை ஆண்டுகளில் இதுநாள் வரை ஒருமுறைக்கூட இளையராஜாவின் கால்களில் விழுந்ததோ, கட்டியணைத்து முத்தம் கொடுத்ததோ கிடையாது. இன்று தான் உங்கள் மத்தியில் இது நடந்திருக்கிறது.

அரசியலுக்கு வர காரணம்
நான் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பிய இரண்டு பேரில் ஒருத்தர் என் சகோதரர், மற்றொருவர் இளையராஜா. நான் அரசியலுக்கு வர வேண்டும் என ஆலோசனை கூறினார். அவர் அப்போது சொன்னது இப்போது நடந்துவிட்டது.

சினிமாவில் இளையராஜா 75
இவர் இசையமைத்த ஆயிரம் படங்களில் 10 சதவீதம் படம் என்னுடையது என நான் பெருமை கொள்கிறேன். எனக்கு இசையை கற்றுக்கொடுத்த வாத்தியார் இளையராஜா. இன்னும் ஒரு 25 வருடம் தான். சினிமாவுக்கு இவர் வந்து 75 ஆண்டுகள் ஆகிவிடும். அதையும் நாம் கொண்டாட வேண்டும்", என கமல் கூறினார்.


Click it and Unblock the Notifications











