twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இளையராஜா 75-ஐ ஏன் ஒத்தி வைக்கக் கூடாது?” தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி

    இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    |

    சென்னை: இளையராஜா பாராட்டு விழா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடக்க இருக்கிறது. இளையராஜா 75 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சி அடுத்தமாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

    Ilayaraja 75: HC questions producers council

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சில தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'இளையராஜா பாராட்டு விழாவுக்கு செய்த செலவு எவ்வளவு?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், இளையராஜா நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதோடு, இந்த நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக்கூடாது எனவும் அது கேள்வி எழுப்பியுள்ளது.

    English summary
    The Chennai high court have questioned Tamilnadu film producers council about postponing Ilayaraja 75 programe.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X