Ilayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை!

நடிகை ரோகினியை விழா மேடையிலேயே இளையராஜா கடுமையாக கண்டித்தார்.

Recommended Video

Actress Rohini at Ilaiyaraja 75: மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை ரோகினி- வீடியோ

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் நடிகை ரோகினி வேண்டாததை பேசி மூக்குடைப்பட்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியும், சில பாடல்களை பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டாவது நாளான நேற்று இளையராஜாவே தனது பாடல்களை, பல இசை கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் ஷங்கர்

விழாவில் ஷங்கர்

இயக்குனர் ஷங்கரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை மேடைக்கு அழைத்த நடிகை ரோகினி, "நீங்களும் இளையராஜா சாரும் சேரும் காலம் எப்போது" என ஆரம்பித்தார். இதனால் இயக்குனர் ஷங்கருக்கு தர்மசங்கடமாக ஆகிவிட்டது.

ரோகினி கண்டித்த இளையராஜா

ரோகினி கண்டித்த இளையராஜா

அப்போது குறுக்கிட்ட இளையராஜா, ரோகினியை கடுமையாக சாடினார். "நீ எனக்கு சான்ஸ் கேட்குறியா? இப்படி பேசுறது தவறு. அவருக்கு கம்பர்ட்டபுளான ஆட்களுடன் அவர் பயணிக்கிறார். இதை எல்லாம் நீ பேசக்கூடாது" என இளையராஜா ரோகினியை கண்டித்தார்.

இளையராஜாவிடம் பயம்

இளையராஜாவிடம் பயம்

இதையடுத்து பேசிய ஷங்கர், "ஜென்டில்மேன் படத்திலேயே இளையராஜாவுடன் வேலை பார்க்க வேண்டியது. ஆனால் அவரிடம் எப்படி வேலை வாங்குவது என பயந்து தான் ஒதுங்கிவிட்டேன். இருப்பினும் வருமான வரித்துறைக்காக கமல் நடித்த ஒரு விளம்பரப் படத்தில் நானும், இளையராஜா சாரும் சேர்ந்து வேலை பார்த்தோம்" எனக் கூறினார்.

பாட்டுப்பாடி அசத்திய விக்ரம்

பாட்டுப்பாடி அசத்திய விக்ரம்

ஷங்கருடன் மேடைக்கு வந்த நடிகர் விக்ரம், இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அவரது இசையை வெகுவாக பாராட்டினார். பின்னர் இளையராஜா இசையில் தனது படத்தில் இடம் பெற்ற 'ஓ பட்டர்ப்ளை' பாடலை பாடி பார்வையாளர்களை அசத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X