twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா 75: டிக்கெட் விற்பனைக்காக பலூனில் பறந்த இளையராஜா, விஷால்!

    இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

    |

    சென்னை : இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை நடிகர் விஷால் மற்றும் இளையராஜா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி விழா எடுக்கப்படுகிறது. இளையராஜாவை கவுரவிக்கும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை, தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Ilayaraja 75: Vishal and Ilayaraja fly in Balloon

    வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளையராஜா 75 விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் நடைபெற்று வந்த 5வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் இளையராஜா மற்றும் விஷால் ஆகியோர் ராட்சத பலூனில் பறந்து இளையராஜா 75 டிக்கெட் விற்பனைக்காக புரோமோஷன் செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் வானில் பறந்தனர்.

    English summary
    The ticket sales for ‘ILAIYARAAJA75’ have started yesterday in 5th Tamilnadu International Balloon festival held at Mahendra city near Chengalpattu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X