இசைக்கு அகவை 78… என்றும் இளையராஜா… ஒன்று திரண்டு வாழ்த்தும் ரசிகர்கள் !
சென்னை : இளைஞானி இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இதனை நெட்சன்கள் சமூகவலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அன்னக்கிளி திரைப்படத்தில் தொடங்கிய இவரது இசை ராஜ்ஜியம் இன்று வரை நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
பல நேரம் கண்ணை மூடி லாபித்து ரசித்து.. ரசித்து.. மீண்டும்.. மீண்டும் கேட்க வைப்பது இவரின் இசையாகத்தான் இருக்கும்.

தலைசிறந்த இசையமைப்பாளர்
இளையராஜா தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை இசைஞானி என்று பெயர் சூட்டி அழைத்து அழகு பார்த்து வருகின்றனர். இளையராஜா அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்

மாஸ்டர் ராஜா
ஞானதேசிகனாக பிறந்த இளையராஜா பின்னாளில் இசையால் உலகத்தைக் கட்டிப்போடுவார் என்று யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. சிறு வயதிலேயே இசை வாத்தியங்கள் மீது தீராத காதல் கொண்ட இளையராஜா ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் என இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்று தனது பெயரை மாஸ்டர் ராஜா என்று மாற்றினார்.

அழகான படைப்பு
நாடகங்கள், இசைகச்சேரிகள் என பல போராட்டங்களுக்கு பிறகு அன்னக்கிளி திரைப்படத்தில் மச்சானப் பாத்தீங்களா...என்ற பாடல் மூலம் அனைவரின் பார்வையையும் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பினார் இளையராஜா. மேற்கத்திய இசையோடு தமிழ் மரபை புகுத்தி அவர் படைத்த ஒவ்வொரு படைப்பும் இன்றும் செவியில் விழுந்து ரீங்காரமிட்டுக்கொண்டு தான் இருக்கிறன.
Recommended Video

பத்ம பூஷண் இளையராஜா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களில் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா. தமிழக அரசின் கலைமாமணி விருது,பத்ம பூஷண், பத்ம விபூஷன், 5 தேசிய விருதுகள் என பல விருதுகளை இசைஞானி பெற்றுள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து
இன்று 78வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூகவலைத்தளத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











