Ilaiyaraja: இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா.. 82 வயசுலயும் இசைஞானி அசத்துறாரே!
சென்னை: இசைஞானி இளையராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து இசை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார். இசைஞானி கடந்த ஆண்டு லண்டனுக்குச் சென்று தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்து வந்தார். இது இந்திய திரை இசையில் எந்த ஒரு இசைக் கலைஞரும் அல்லது இசையமைப்பாளரும் செய்திடாத ஒன்று. சிம்பொனி அமைத்து, தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்த இசைஞானியை தமிழ்நாடு அரசு தனி பாராட்டு விழா நடத்தி கௌரவித்தது. இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார் இசைஞானி.

அதாவது அவர், “ பிப்ரவரி 3ஆம் தேதியுடன் நான் எனது புதிய ஸ்டூடியோவுக்கு வந்து 5 ஆண்டுகளை நிறைவு பெறுகிறது. மேலும் நான் எனது இரண்டாவது சிம்பொனியை பெரும்பாலும் முடித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் பலர் இசைஞானி எப்படித்தான் இந்த 82 வயதிலும் இளைஞரைப் போல வேலை செய்கிறாரோ என்று பாராட்டி வருகிறார்கள். அதுவும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கிறார், இசைக் கச்சேரிகளை நடத்துகிறார். இதற்கிடையில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கிற, பெருமை சேர்க்கிற சிம்பொனியையும் எழுதுகிறாரே இது எல்லாம் எப்படி சாத்தயப்படுகிறது? என்று வியப்புடன் கேள்வி கேட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இன்றைய கால இளைஞர்கள் இசைஞானியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான திறனே இதுதான் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











